New Page 1
பெயரையே ஆகும்.
மேலும், சாற்றியே என்று இருக்க வேண்டியதைச் சாத்தியே என்று சொல்லை மாற்றியது வைணவப் பற்றின்
காரணமாகும். திருமாலோ அன்றி, அவரது அவதாரமோ திருமண் இட்டது உண்மையாயின், ஆழ்வார்கள்
தம் அருள் வாக்கில் யாண்டென்ம் கூறி இருக்கவேண்டும். அங்ஙனம் அவர்கள் கூறிற்றிலர். இத்தகைய
உண்மை இருத்தலினால்தான், கம்பர் பாடிய மேலே காட்டிய அடி அடங்கிய “என்று நான்முகன்” என்று தொடங்கும்
பாடல் சில பிரதிகளில் இல்லை எனத் திரு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் தமது பதிப்பில் நன்கு
குறிப்பிட்டுள்ளனர்.
மண் என்றது ஈண்டுத்
திருமண்ணாகிய நாமமாகும். திரு நாமத்தை திருமண் என்றே கூறுவர். “மண் மாசு படப் பூசும்
வடிவுடையார்” என்று பரஞ்சோதியார் கூற்றைக் காண்க.
திருநீற்றைப் பூசினால்தான்
மோகத்தை, அதாவது மயக்க அறிவை, உலக போகத்தை நீக்க முடியும். மண்ணைப் பூசினால் (திடுமண்)
மோகத்தை ஒழிக்க முடியாது என்பதே “மண் தோய்ந்து *** போகம் அவர்நீத்து உய்வாரே” என்ற
அடியின் கருத்து.
இந்த உண்மையினைக்
கீழ்வரும் பாடல்களால் நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
ஆதிபகவன் ஞானவடி
அழலில் பூத்து நித்தியமாய்
அணிந்தோர் தமக்கு
வசிகரமாய் அருந்தி னோர்கட்
காரமுதாய்
நீதி அறியும்
பசுமலத்தை நீக்கும் ஒருநல் குறிகாட்டி
நிகழ்பேர் இன்பக்
கடலூட்டி நின்ற புகழ்வெண் திருநீறே
என்பது திருப்போரூர்
சிதம்பர சுவாமிகள் பாட்டு.
திவசங்கதொ றும்கொண்டிடு
தீமைப்பிணி தீரும்
பவசங்கடம் அறும்இவ்இக
பரமும்புகழ் பரவும்
கவசங்கள்எ னச்சூழ்ந்துறு
கண்ணேறது தவிரும்
சிவசண்முக எனவேஅருள்
திருநீறணிந் திடிலே
|