பக்கம் எண் :

 

       சிற்றில் பருவம்

647

    மாலேந்திய குழலார்தரு மயல்போம்இடர் அயல்போம்
    கோலேந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும்
    மேலேந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
    வேலேந்திய முருகாஎன வெண்ணீ றணிந்திடிலே

    தவம்உண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும்
    நவம்அண்மிய அடியார் இடம் நல்கும்திறன் மல்கும்
    பவனன்புனல் கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
    சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே

    துயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன்
    கைலேறிய பாசம்துணி கண்டேமுறித் திடுமால்
    குயிலேறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும் 
    மயிலேறிய மணியேஎன வளர்நீ றணிந்திடிலே

    தேறாப்பெரு மனமானது தேறும்துயர் மாறும்
    மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஒருவும்
    வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர்
    ஆறாக்கரப் பொருளேஎன அருள்நீறணிந் திடிலே

என்பன வடலூர் இராமலிங்க சுவாமிகளின் பாடல்கள்.

    ஆகவே, திரு. பிள்ளை அவர்கள் வைணவர்களுக்கு நல் நெறி சேரும் அருள் உபதேசங்களைச் செய்யும் முறையில் சிறுமியர் வாயின் மூலம், சிற்சிலர் (வைணவர்கள்) தம் நெற்றியில் திருமண் இட்டிருத்தலின், அம்மண்ணைச் சேக்கிழார் தம் காலால் கலைத்து விளையாடும் விளையாட்டு நிகழுமாயின், அவர்கள் திருநீறணிந்து மோகம் நீங்கி உய்வர் என்றனர்.  ஈண்டுத் திரு. பிள்ளை அவர்களின் சைவ சமயப் பற்றின் உண்மை நிலையினை உணரலாம்.

    சிறுமியர்கள், “பெருமானே !  உமக்கு மண்ணைப் பொருந்து விளையாட விருப்பம் இருப்பின், எங்கள் மணல் வீட்டைக் காலால் சிதைக்கவேண்டா.  வேண்டுமானால் வைணவர்கள் நெற்றியில் அணியும் திருமண்ணைக் கலைத்து விளையாடும் ;’ அஃது அவர்களைத் திருநீறணியும் விருப்பத்தை யாகிலும் உண்டுபண்ணி அவர்கள் மோகம் நீங்கி உய்யும்