பக்கம் எண் :

650

             சிற்றில் பருவம்

மாளிகைகளில் இருக்குமாறு செய்வார் என்ற அவரது அருள் அறத்தை வியந்தவாறாயிற்று.

    உலகில்  பூசுரர் எனப்படும் பெருமைக்குரியவர் பிராமணர்கள்.  அவர்கள் வேதம் ஓதும் நெறியில் ஒழுகுபவர்.  ஆகவே, அவர்கள் சிறந்தவர்கள் என்ற கொள்கை வைதீக உலகில் உண்டு.

    இங்ஙனம்  சிறந்தவர்கள்  என்ற கருதப்பட்டாலும்,  அவர்கள் ஒழுக்கத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  ஒழுக்கம் குறையில் அவர்கள் பெருமையும் மறையும்.  இதனைத் திருவள்ளுவர்,

        மறந்தும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
        பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

என்றனர்.  ஓத்து என்பது ஈண்டு வேதம் ஆகும்.

    யார் யாரைப் பிராம்மணர் என்று கூறுதற்கு ஆகார் என்ற இடத்துத் திருமூலர்,

    சத்தியம் இன்றித் தனிஞானம் தான்இன்றி
    ஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப்
    பத்தியும் இன்றிப் பரன்உண்மை இன்றிப்
    பித்தேறும் மூடர் பிராமணர்தாம் அன்றே

என்று கூறினார்.  இத்திருமூலரே யார்தாம் பிராமணர்கள்? அவர்கள்தாம் யாவர்? என்ற இடத்து,

        பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
        குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
        திருநெறி யான கிரியை இருந்து
        சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே.

என்றருளினர்.  இத்தகைய பண்புடையாரினும் சிறந்தவர்கள் அடியார்கள் என்பதைத்தான் “மறையோர் முன் கூறுபடும் நம்பரன் அடியார்” என்றனர். “மறையோர்முன் கூறுபடு நம்பரன் அடியார்”  என்னும் தொடர்க்கு,  பிராம்மணர்கள்  முதலாக  முன் கூறப்படும் அடியார்கள் என்று