பக்கம் எண் :

என

652

             சிற்றில் பருவம்

என்றும், “மலைநிகர் மாடவீதி மருங்குதம் மனையைச் சேர்ந்தார்” என்றும், குங்கிலியக் கலய நாயனார் புராணத்துள் வீட்டு வளன் கூறியதைக் காணவும்.

    பிராம்மணர்கட்கு வீடுகள் கட்டி அவற்றில் அவர்களை இருத்தல் ஓர் அறமாகக் கருதப்பட்டது என்பது கீழ்வரும் திருமந்திரப் பாடலால் தெரிய வருகிறது.

    அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயில்என்
    சிகரம் ஆயிரம் செய்துமுடிக் கில்என்
    பகரும் ஞானி பகல்ஊண் பலத்துக்கு
    நிகரிலை என்பது நிச்சயம் தானே

    சேக்கிழார் மந்திரியாராக இருந்தமையின், பிராம்மணர்கட்கு வீடு கட்டி வாழச் செய்திருக்கலாம் என்ற கருத்தில் “மறைறோர் முன்**்*  குடி அமைப்பாய்” என்று சிறுமியர் கூறினர்.  மேலும், அவர்கள், “நாங்கள், நீங்கள் கட்டித்தரும் வானளாவிய மாளிகைகளாகவும் குடி இருப்புடைய வீடுகளாகவும் கட்டாமல், அவற்றினும் வேறுபட கட்டிய மணல் வீட்டைச் சிதைக்கலாமா? நாங்கள் கட்டி விளையாடும் வீட்டைச் சிதைக்காமல் போனால் உங்கட்கு என்ன நஷ்டம் வரும்” என்று கூறுதல் இரக்கம் விளைவிக்கும் மொழிகளாக உள்ளது.

    வேழம் எனினும் கரும்பு எனினும் ஒன்றே. ஈண்டு இவ்வாறு கூறியது இருபெயரொட்டுப் பண்புத்  தொகை  என்னும்  இலக்கணம்  பற்றி  என்க.   கரம்பு நிலத்தில் கருப்பஞ்சாறு பாய்ந்து அந்நிலமும் சேறாகக் குழைந்தது  எனக்கூறி,   நாட்டின்  செழிப்பை  ஆசிரியர் அறிவித்தனர்.

(80)