பக்கம் எண் :

10

 

       சிற்றில் பருவம்

653

10.      அலைக்கும் புனல்சூழ் அம்பலத்தில்
             ஆடும் பெருமான் அருள்பெற்றால்
         அவன்செய் தொழில்ஓர் ஐந்தாண்டு
             அமைந்த தொழிலோ மேற்கோடல்
         நிலைக்கும் கடைஎன் றொழித்தனையோ
             நினையா நிற்கும் அனுக்கிரகம்
         நீயே அதுசெய் யாவிடின்எம்
             நிரப்பு நீக்கு பவரியாரே
         மலைக்கும் பிறவிப் பிணிமருந்தே
             வாழ்த்து வார்சிந் தாமணியே
         வயங்கும் சைவப் பெருவாழ்வே
             மாறாக் கருணை மாக்கடலே
         சிலைக்கும் தமிழ்த்தண் டகநாடா
             சிறியேம் சிற்றில் சிதையேலே
         செல்வம் செருக்கு குன்றையருள்
             செல்வா சிற்றில் சிதையேலே

    [அ. சொ.]  மலைக்கும்-ஸ்தம்பிக்கும், வருந்தும், பிணி-நோய்,வயங்கும்-விளங்கும், மா-பெரிய, சிலைக்கும்-ஒலிக்கும் புனல்-நீர், அம்பலத்தில்-பொற் சபையில், அவன்-அந்நடராசப்பெருமான், தெழில் ஓர் ஐந்து-படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்கள், நிரப்பு-வறுமை, கடை-கடையாய குணம், அது-அனுக்கிரகம் செயல்.

    விளக்கம் : அம்பலம் என்றது ஈண்டு இறைவன் நடனம் புரியும், சபையாகும்.  அச்சபைகள் ஐந்து.  அவையே பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தின அம்பலம், சித்திர அம்பலம் தாம்பர அம்பலம், என்பன.  பொன்னம்பலம் சிதம்பரத்திலும், வெள்ளியம்பலம், மதுரையிலும், இரத்தின அம்பலம் திருவாலங்காட்டிலும், சித்திர அம்பலம் திருக்குற்றாலத்திலும், தாம்பர அம்பலம் திருநெல்வேலி