ப
பிரமகற்பங்கள் தோறும்
பேணுநர் பொருட்டால் இந்தத்
திருநடம் ஏழும் செய்தும்
செப்பும் அத்தானம் கேண்மோ
அரவும் அம்புலியும்
போற்றும் அருள்தில்லை அம்பலத்தில்
பரவும் ஆநந்தத் தாண்டவம்
செய்வோம் மைப்பொன்
( பாவாய்
இவர்மணி மாடக் கூடல்
இரசிக சபையில் நின்று
தவர்அடி பரவச் செய்தும்
சந்தியா தாண்ட வம்செம்
பவளமெல் இதழி நின்பேர்ப்
பரவு தாண்டவத்தை என்றும்
சிவமிகு திருத்தலத்தில்
சிற்சபை அதனில் செய்வோம்
அத்திரி கூட வெற்பென்
றறைதிருக் குற்றா லத்தில்
சித்திர சபையில் செய்வோம்
திரிபுர தாண்ட வம்பூம்
கத்திகைக் குழலீ ஆலம்
காட்டினில் காளிதாண்ட
வத்தை நன்கியற்று
கிற்போம் இரத்தின சபையில்மாதோ
தாம்பிர சபையில் தேவ
தாரு வனநெல் வேலி
ஆம்பிர பலத லத்தில்
ஆற்று தும்முனி நிருத்தம்
காம்பிரங் குறுதோளீ
சங்கா ரத்தாண் டவத்தை யாவும்
கூம்பிர வதனில் நின்று
குலவுற இயற்று கிற்போம்
இவற்றை எல்லாம் உள்ளடக்கியே
பொதுப்படத் திரு. பிள்ளை அவர்கள் “அம்பலத்தில் ஆடும் பெருமான்” என்றனர். ஐந்தொழில்கள்
ஒருசேர நடத்தும் தில்லையில் ஆனந்த நடம்புரியும் நடராசப் பெருமான் என்று கூறினும் அமையும்.
அலைக்கும் புனல் என்றது நீர்வளக்குறிப்பு.
இறைவன் தாண்டவம்
ஐந்தொழில் நடத்தற்கே என்பதையும், அத்தாண்டவம் ஆன்மாக்களை ஆனந்தத்தில் அழுத்துதற்கே என்பதையும்
தெளிவுற உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த நூல்,
“ஓங்கார மேநல் திருவாசி
உற்றதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம்-ஆங்காரம்
அற்றார் அறிவர் அணி
அம்பலத்தான் ஆடல்இது
பெற்றார் பிறப்பற்றார்
பின்”
என்றும்,
|