New Page 1
சேக்கிழாராம் குழந்தை
சிறுமியர் வீட்டை அழித்தது. அதுபோது அச்சிறுமியர், “இறைவர் செய்யும் ஐந்து தொழில்களுள்
நடுவில் அமைவது அழித்தல் தொழில். அதனை நீங்கள் சிறுமியர்மாட்டும் செய்வது நீதியோ?” என்றனர்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் வரிசையில் அழித்தல் தொழில்
இடையில் இருத்தல் காண்க. இதனையே “ஓர் ஐந்துள் நடு அமைந்த தொழிலோ மேற்கோடல்?” என்றனர்.
“நடு அமைந்த தொழிலோ” என்பதற்கு நீங்கள் செய்வது நீதியான செயலா?” எனவும் பொருள் கூறலாம்.
மேலும் அவர்கள்
“ஐய ! அனுக்கிரகத் தொழிலை மேற்கொள்வது, நம் நிலைக்குக் கடைப்பட்டது என்று அவ்வனுக்கிரகத்தை
மேற்கொள்ளாது விட்டொழித்தீரோ? அல்லது அத்தொழிலை ஐந்து தொழில்களில் ஈற்றில் அமைந்த
தொழில் அதனைப் பின்னால் செய்வோம் என்று எண்ணி விட்டீரோ? நீங்கள் எங்கட்கு அனுக்கிரகம்
செய்யாவிடில், நாங்கள் எப்படி உய்வோம்” என்று இரக்கம் தோன்ற இயம்பினர். இக்கருத்துக்களே
“நிலைக்கும் *** அனுக்கிரகம்” என்னும் தொடரில் அமைந்துள்ளன.
பெரியோர்கள் அநுக்கிரகம்
செய்பவர்கள் ; அடைந்தவரை ஆதரிப்பவர்கள். ஆகவே, அதை எண்ணியே “அநுக்கிரகம் நீயே அது செய்யாவிடின்,
எந் நிரப்பு நீக்குபவர் யார்?” என்று சிறுமியர் வினவினர். நிரப்பு ஈண்டு வறுமை. அனுக்கிரகம் எவராலும் வேண்டப்படுதலின், நினையா நுற்கும் அனுக்கிரகம் என்றனர்.
சேக்கிழார் பாடல்கள்
பிறவு என்னும் நோயை நீக்கும் மருந்தாதலாலும் நினைத்ததைத் தரும் சிந்தாமணி ஆதலாலும், சைவசமய
உண்மைகளை வாழச் செய்யும் வாழ்வாதலாலும் கருணைக்கு இடமாதலாலும் “மருந்தே, சிந்தாமணியே”
பெருவாழ்வே, மாக்கடலே, என்றனர்.
தமிழ் என்னும்
சொல் இனிமை என்றாலும் சிற்சில சமயங்களில் சினம்கொள்ளும் நிலைக்கும் அம்மொழி துணை
|