ப
பாலி-பாலாற்றின்,
பரவு-போற்றும், துண்டீரநாட-தொண்டைநாடனே, தென்றலங்கன்று-மெல்லிய தென்றல் காற்று, மன்றம்-கழகங்களையுடைய,
வெளியிடங்களையுடைய மரத்தடியாகிய பொது இடங்களையுடைய. குன்றைமுனி-சேக்கிழார் பெருமானே !
விளக்கம் : சிறுபறை
என்பது ஒருவகை இசைக்கருவி. இது தோலால் ஆனது. இது சிறுவர்களால் அடிக்கப்படுதலின், சிறுபறை
எனப்பட்டது. இது மூன்றாம் ஆண்டில் குழந்தைகளால் அடிக்கப்படுவது.
யானை பெரிதாயினும்
சிங்கக்குட்டிக்கு அஞ்சும் இயல்பினது. யானை தனது கனவில் சிங்கத்தைக் கண்டாலும் அஞ்சும்
என்பர். சிங்கத்தின் கர்ச்சனையைக் கேட்பினும் யானை அஞ்சுமாம். இது குறித்தே “சிங்க
சொற்பனம்” என்னும் பழமொழியும் எழுந்துளது. ஆகவே, ஈண்டுப் பரசமங்களாகிய யானைகளுக்குச் சேக்கிழாரது
சிறுபறை முழக்கம் சிங்கக்குட்டி முழக்கமாகக் குறிப்பிடப்பட்டது. ஆகவே, சேக்கிழார் பரசமயக்
கோளரி ஆயினர். ஒலியின் மூலம் பரசமயக் கோளரி என அறிவித்தலைச் சேக்கிழாரும் திருஞானசம்பந்தர்
வாழ்க்கையில்,
சீர்நிலவும் திருத்தேளி
சேரியினைச் சேர்ந்து
சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது
சார்வறியாச்
சாக்கியாதம் போதி மங்கை
சார்தலும்மற்
றதறிந்து சைவர் எல்லாம்
ஆர்கலியின்
கிளர்ச்சிஎனச் சங்கு தாரை
அளவிறந்த பல்லியங்கள்
முழக்கி ஆர்த்துப்
பார்குலவும் தனிக்காளம்
சின்னம் எல்லாம்
“பரசமயக்
கோளரி வந்தான்” என் றூத
என்று குறிப்பிட்டுள்ளனர்.
சேக்கிழார் அநபாயனைச்
சீவக சிந்தாமணி நூலைக் கேட்க வேண்டா என்று கூறியபோது, ஆண்டுச் சைன
|