பக்கம் எண் :

இத

 

       சிறுபறைப் பருவம்

663

இதனைக் கம்பர்,

    வானவர் குலத்தெமர் வரத்தி னால்வரும்
    வேனில்வேள் இருந்தவம் மிதிலை நோக்கிநம்
    சேனையும் அரசும் செல்க முந்தெனா
    ஆனைமேல் அணிமுர சறைகென் றேவினான்

என்று குறிப்பிட்டிருப்பது காண்க.  இவ்வாறு அறிவிப்பவர் வள்ளுவ மரபினர் என்பதையும் கம்பர்.

    வாம்பரி விரிதிரைக் கடலை வள்ளுவன்
    தேம்பொழி துழாய்முடிச் செங்கண் மாலவன்
    ஆம்பரி சுலகெலாம் அளந்து கொண்டநாள்
    சாம்புவன் திரிந்தெனத் திரிந்து சாற்றினான்

என்று பாடிக் காட்டியுள்ளனர்.

    இம்முரசு மூன்று சிறந்தநாட்களில் அறையப்டும். மணநாளிலும், போருக்குச் செல்லும்காலும், கொடை கொடுக்கும்போதும் ஆகும்.  இவற்றை முறையே மணமுரசு. போர் முரசு, கொடை முரசு என்பர்.  ஈண்டுக் கொடை முரசும், படை முரசும் முழக்கப்பட்டதைக் குறித்திருப்பதைக் காண்க.

    குமர குருபர சுவாமிகள் மும்முரசுகளையும் ஒருங்கே முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழில் அழகுற,

    வம்மின் எனப்புல வோரை அழைத்திடு
        வண்கொடை முரசமென
    வடகலை தென்கலை யொடுபயி லும்கவி
        வாணர்க ளோடிவர
    அம்மென் மடப்பிடி பொன்னுல கீன்றவ
        ணங்கை மணம்புணரும்
    அணிகிளர் மணமுர சென்னஎம் ஐயனொ
        டம்மை மனம்குளிரத்