பக்கம் எண் :

எனச

668

             சிறுபறைப் பருவம்

எனச் சிறப்பிக்கப்பட்டனர்.  இவர்கள் மதுரைக்கு மீனாட்சி அம்மையார் திருமண நிமித்தம் சென்ற காலையும், தில்லைக் கூத்தனது தரிசனம் காண்டல் இன்றி உணவு அருந்தோம்  என்று கூறியதாகப்

“பொன்னவிர் கமலம் பூத்த புனிதநீர் ஆடித் தத்தம்
நன்னெறி நியமம் முற்றி நண்ணினார் புலிக்கா லோனும்
பன்னக முனியும் தாழ்ந்து பரவிஅம் பலத்துள் ஆடும்
நின்னருள் நடம்கண் டுண்ப தடியேம்கள் நியமம்”

என்று திருவிளையாடல் புராணம் கூறுதலால் இவர்கள் ஒங்கு முனிவர் ஆயினர் ; கைகூப்பி அரமுழக்கம் செய்பவர் ஆயினர்.

    “அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறைபேசும் ஆனந்த ரூபமயிலே” என்ற தாயுமானவரும், “கருதரிய கடலாடை உலகு பல அண்டம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி” என்றும் சிவப்பிரகாசரு பாடி இருத்தலால் உமை உலகம் ஈன்றவள் என்பது பெறப்படுதல் காண்க.  மேலும், அம்மையாரின் சிறப்பினை,

        சோதிப்பதி அன்றி வேறொரு
            தெய்வம் தொழுதற் கில்லை
        ஓதில் பிறர்என அச்சம்
            உறாமல் உயிர்கள் எல்லாம்
        நீதிப் புதல்வர்கள் ஆயின
            ஆதலின் நீகொள் கற்புப்
        பேதிப்ப தன்றுகண் டாய்குன்றை
            வாழும் பெரியம் மையே

என்றும் சிவப்பிரகாசர் பாடியுள்ளனர்.

    இறைவனையே விரும்புபவள் இறைவி ஆதலின், அவள் சிவகாமி ஆயினள்.  இறைவன் சிவகாமி அம்மையார் களிக்க நடம் புரிகின்றனர் என்பது அறிஞர் கொள்கை.  “மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே ஆதியும் முடியும் இல்லா அற்புதத் தனிக் கூத்து” எனச் சேக்கிழாரும்,