| 
New Page 1
 
சோதி என்றனர்.  திருமால் 
இறைவன் நடம் நவிற்றும் கால் மத்தனம் முழக்கம் செய்தவன் என்று அறிஞர் கூறுவர்.  ஆறுகள் 
வெள்ளப் பெருக்கால் ஓடிவருகையில் மணிகளை அடித்துவரும் என்பதைக் கவிகள் ஆற்றுவெள்ளத்தைச் சிறப்பிக்குங்கால் 
பாடிய பாடல்களால் அறியலாம். 
    “விழிக்கும் தழைப்பீலி 
யோடேல முந்தி 
     விளங்கு மணிமுத்தோடு 
பொன்வ ரன்றி 
     அழிக்கும் புனல்சேர் 
அரிசில் தென்கரை 
     அழகார் திருப்புத் 
தூர்அழ கன்நீரே” 
என்று சுந்தரர் 
பாடுமாற்றைக் காண்க.  
    வளை படுகரில் மேய்தல் 
என்றதனால் நாட்டின் நீர் வளத்தை உணரலாம்.  வாய்வெருவுதல் வாய்விட்டு அரற்றி அஞ்சுதல்.  
வளை தனது சிற்றுடலையும், எருமையின் பேர் உடலையும் கண்டு அஞ்சியே ஓடியது. 
    நாட்டுக்கு  சிறப்புச் 
செல்வம்.   அச்செல்வம்  பற்றா  நிலையில்  இருத்தல்  கூடாது.  செல்வம் மிக்கு இருக்கவேண்டும்.  
    “பிணிஇன்மை செல்வம் 
விளவுஇன்பம் ஏமம் 
     அணிஎன்ப நாட்டிற்குஇவ் 
வைந்து” 
என்ற குறட்பாவைக் காண்க. 
    நாட்டின் வளம் எவ்வாறு 
இருக்கவேண்டும் என்பதை விளக்க வந்த வள்ளுவர். 
    தள்ளா விளையுளும் 
தக்காரும் தாழ்விலார் 
    செல்வரும் சேர்வது 
நாடு 
    உறுபசியும் ஓவாப் 
பிணியும் செறுபகையும் 
    சேராது இயல்வது நாடு 
    நாடுஎன்ப நாடா வளத்தன 
நாடுஅல்ல 
    நாட வளம்தரும் நாடு 
என்று குறிப்பிட்டிருத்தலையும் 
காண்க. 
    இவற்றை எல்லாம் 
உட்கொண்டே “தேங்கு திருவம் பரவு துண்டீர வளநாடு” என்றனர். 
 
(83) 
 |