பக்கம் எண் :

674

             சிறுபறைப் பருவம்

பாலாறு ஆழமுடையது.  அதற்கேற்ப நீருடையது ;  அதனால் அலை மிக்க எழக்கூடியது, அங்ஙனம் எழுந்த அலை கற்பக நாடு அளவு எழுந்து, அங்குள்ள கற்பகத் தருவை முட்டியதாம். அங்ஙனம் முட்டுண்ட கற்பகத் தரு தன் அடியில் இருந்த காமதேனுவை நோக்கி, “நீ நந்தி மலையில் தவம் கிடந்தபோது வசிட்டர் ஏவிய கன்றிற்குப் பால் சுரந்தமையால் அன்றோ இப்பாலாறு உண்டாகியது.  அந்தப் பாலாறு இப்போது என்னை வந்து மோதுகிறது.  ஆகவே, நீதான் காரணம்” என்று கூறியதாகக் கவி அழகு படப் பாலாற்றின் வளத்தினைக் கூறினர்.                             

(84)

4.     ஆன்றசிவ புண்ணிய முழக்கமும் பற்பலவர்
           ஆயஅடி யவர்தம்வரலா
       றாகிய சரித்திர முழக்கமும் தெய்வமணம்
           அகலாத தமிழ்முழக்கும்
       ஏன்றபல அரமுழக் கமும்இணை இலாதாய
           இனியதிரு அருள்முழக்கும்
       எய்துதற் கரிதாம் சிவானு போகப்பேர்
           இரும்பெரும் முழக்கும்ஆன
       மான்றபைங் கமுகம் பொழில்தலைத் தவிர்செய்ய       
           மதுவநிறை தேத்தடைக்கண்
       வான்பிறைக் கோடுதற் கவர்இனன் எனக்கீள
           வாவிகுளம் ஓடைஎங்கும்
       தேன்தவழ அதுவிழும் துண்டீர வளநாட
           சிறுபறை முழக்கியருளே
       தென்றலங் கன்றுலவு மன்றஒண் குன்றைமுனி
           சிறுபறை முழக்கியருளே.

    (அ. சொ.) ஆன்ற-நிறைந்த, சிவபுண்ணியம்-சிவன் மகிழச் செய்த நற்செயல்கள், திருவருள் முழக்கு-இறைவன் கிருபை இருந்தவாறு என்னே என்று வியந்து முழக்கும்.  முழக்கும்-சிவானுபோகம் சிவனுடன் இரண்டறக் கலக்கும்