New Page 1
மோலி என்றனர். மன்னனைப்
பணியாதவர் இறப்பர் என்ற குறிப்பினால் அனபாயனது வெற்றி புலப்படுகிறது.
மக்கட்கு கண்மணி,
திருநீறு, ஐந்தெழுத்து மிகமிக இன்றியமையாதவை. கண்மணி உடல் போன்றது. திருநீறு உடைபோன்றது,
ஐந்தெழுத்து உயிர்போன்றது. இம் மூன்றும் இல்லாமல் ஒருவன் உலகில் வாழ முடியுமா என்பதைச்
சிறிது சிந்தனை செய்யவேண்டும். ஐந்தெழுத்தாவது சிவாயநம என்னும் மகா மந்திரம் ஆகும். நீற்றின்
மாண்பை,
ஆதி பகவன் ஞான வடிவழலில்
பூத்துநித் தியமாய்
அணிந்தோர் தமக்கு
வசிகரமாய் அருந்தினோர்கட்கு
ஆர்அமுதாய்
நீதி அறியும் பசுமலத்தை
நீக்கும் ஒருநற் குறிகாட்டி
நிகழ்பேர்இன்பக்
கடலூட்டி நின்ற புகழவெண் திருநீறே
என்றும், கண்மணியின்
சிறப்பை,
அரியமனமும் அறிவரிதாய்
அருவாய்நிறைவாய்
இருந்துமுனம்
அமரர்திரிபுரம்
செய்குறை
அறையக்கேட்டு
முக்கண்வழிக்
கரியகளச் செம்புயல்கருணை
பொழியப்பெருகும்
கடல்பிறந்து
கருதும்அடியார்
பவக்கடலைக்
கடத்தும்மணியைத்
துதித்திடுவாம்
என்றும், பஞ்சாட்சரப்
பேற்றினை,
கருதரிய பலஉயிர்கள்
பந்தனக் கார்க்கடல்
கரையிலா வருகலனை
அன்பருள் காட்சியை
அருமறையும் அறிவரிய அஞ்சுகப்
பேற்றினை
அரியசிவன் உரியபெயர்
ஐந்தினைப் போற்றுதும்
என்றும் திருப்போரூர்
சிதம்பர சுவாமிகள் உணர்த்தும் ஆற்றை அறிக-
|