பக்கம் எண் :

தூய

688

             சிறுபறைப் பருவம்

தூயவெண் ணீறுதுதைந்தபொன் மேனியும் தாழ்வடமும்
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்துருகிப் 
பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச்செந்
                                        சொல்
மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே

என்ற பாடலின் சவையையும் இனிமையையும் துய்க்கவும்.  இதேபோல,

        மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாரும்
            திருவடிவும் மதுர வாக்கில்
        சேர்வாரும் திருவாயில் தீந்தமிழின்
            மாலைகளும் செம்பொன் தாளே
        சார்வான திருமனமும் உழவாரத்
            தனிப்படையும் தாமும் ஆகிப்
        பார்வாழத் திருவீதிப் பணிசெய்து
            பணிந்தேத்திப் பரவிச் செல்வார்

என்ற பாடலில் அமைந்த இனிமையையும் படித்து இன்புறுக.

    இன்னோரன்ன இனிய சுவை மிக்க பாடல்களின் சுவையை அறிந்தே காஞ்சி புராண ஆசிரியர்,

    இடையறாப் பேரன்பும் மழைவாரும்
        இணைவிழியும் உழவா ரத்திண்
    படையறாத் திருக்கரமும் சிவபெருமான்
        திருவடிக்கே பதித்த நெஞ்சும்
    நடையறாப் பெருந்துறவும் வாகீசப்
        பெருந்தகைதன் ஞானப் பாடல்
    தொடையறாச் செவ்வாயும் சிவவேடப்
        பொலிவழகும் துதித்து வாழ்வாம்

என்றும், உறையூர்ப் புராண ஆசிரியர்.

    கந்தைமிகை யாம்கருத்தும் கையுழவாரப்
        படையும் கவின்வெண் ணீறும்
    சிந்தையிடை அறஅன்பும் சிவஞானம்
        பழுத்தொழுரு செய்ய வாயும்