தந
தந்தையொடு தாயிலான் திருவடிதை
வருமனமும் தாரைக்
கண்ணும்
நிந்தைஅறு முழுத்துறவும்
உடையபிரான்
அடிபணிந்து நீடு
வாழ்வாம்
என்று பாடிச் சேக்கிழார்
கவிச் சுவையை நுகர்ந்தனர்.
சேக்கிழார் பாடல்களில்
சிவமணமே கமழும். சிற்றின்பக் காதல் வழியும் சிவமணமே கமழும் பாடல்கள் அவரால் பாடப்பட்டன
எனில், சேக்கிழாரது பாடல்களின் சிவமணம் கமழும் எனக் கூறவும் வேண்டுமோ?
கற்பகத்தின் பூங்கொம்போ
காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின்
புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த
விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ
அறியேன்என் றதிசயித்தார்
முன்னேவந் தெதிர்தோன்றும்
முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ தார்மார்பில்
விஞ்சையனோ
மின்ளேர்செஞ் சடைஅண்ணல்
மெய்யருள்பெற் றுடையவனோ
என்னேஎன் மனம்திரித்த
இவன்யாரோ எனநினைந்தார்
என்ற இடத்துச் சுந்தரர்
பரவையார் சந்திப்பில் சிவமணம் கமழும்படி பாடியதைக் காண்க.
பரவையாரைத் தேடிய
சுந்தரர், “அவ்வம்மையாரை, “ஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே” “எம்பிரான் அருள் எந்நெறிச்
சென்றதே, “எந்தையார் அருள் எவ்வழிச் சென்றதே” என்று கூறி வருந்தியதாகப் பாடி இருப்பது கொண்டும்,
இவ்வாறே பரவையார் சுந்தரரை எண்ணி வருந்தியபோது, “அந்தண்புனலும் அரவும் விரவும் உடையான்
அருள் பெற்றுடையார்” “அலரும் நிலவும் மலரும் முடியார் அருள்பெற்றுடையார்” என்று சுந்தரரைக் குறித்துப்
பாடி இருப்பது கொண்டும் சிவமணம் கமழப் பாடல்கள் திகழ்வதைக் காணலாம்.
சுந்தரர் பரவையரது
இன்பத்தை இனிது நுகர்ந்த போதும், இறையடி மறவாதவர் என்று பாடிக் காட்டி இருப்பதும் சிவமணம்
கமழும் பாடல்தானே,
|