தன
தன்னையா ளுடைய பிரான்
சரணார விந்தங்கள்
சென்னியிலும் சிந்தையிலும்
மலர்வித்துத் திருப்பதிகம்
பன்னுதமிழ்த் தொடைமாலை
பலசாத்திப் பரவைஎனும்
மின்னிடையாள் உடன்கூடி
விளையாடிச் செல்கின்றார்
என்ற பாடலைக் காண்க.
சுந்தரர் நரசிங்க
முனைஅரையர் என்னும் மன்னரால் வளர்க்கப்பட்டு அரச போகத்தில் ஆழ்ந்திருந்தனர். அந்நிலையில்
அவர்க்குத் திருமணம் கூடிற்று. மணப்பந்தர்க்குப் போகப் புறப்பட்ட நம்பியாரூரது திருக்கோலத்தைப்
புகலும் நம் சேக்கிழார்,
மன்னவர் திருவும் தங்கள்
வைதிகத் திருவும் பொங்க
நன்னகர் விழவுகொள்ள
நம்பியாரூரர் நாதன்
தன்னடி மனத்துள் கொண்டு
தகுந்திரு நீறுசாத்திப்
பொன்னணி மணியார்
யோகப் புரவிமேல் கொண்டு போந்தார்
என்று பாடுவாராயின் சிவமணம்
கமழும் பாடல்கள் இவரது நூலில் உண்டு என்பதில் ஐயம் உண்டோ?
இசைக் கருவிகள் பல
இருப்பினும், எடுத்துக் கூறும் பெருமைக்குரிய இசைக்கருவி குழலும் வீணையும் ஆகும். ‘குழல் இனிது
யாழ் இனிது என்ப” என்று வள்ளுவரும், ஏனையரும் ‘குழல் கொண்டும் யாழ் கொண்டும்” என்றும் “குழல்
வீணை கொடு கொட்டி” என்றும் இவ்விரண்டினையே விதந்து கூறினர். இக்காலத்தில் யாழ் என்பதையே
வீணை என்று கருதியுள்ளனர். அங்ஙனம் யாழும் வீணையும் ஒன்றே என்று கருதுவதற்கு இல்லை. யாழ் வேறு,
வீணை வேறு,”இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்” என்று மாணிக்கவாசகர் வீணை யாழ் ஆகிய இவ்விரண்டையும்
ஈண்டுத் தனித்தனிப் பிரித்துப் பாடிக் காட்டி இருப்பதைக் காண்க.
தேவாரத் திருமுறைகளிலும்
வீணை வேறு, யாழ் வேறு என்ற குறிப்பே காணப்படுகிறது. “பண்ணொடு யாழ் வீணை
|