பக்கம் எண் :

பய

 

       சிறுபறைப் பருவம்

691

பயின்றாய் போற்றி” என்ற தொடரைக் காண்க.  இது நிற்க,

    குழலும் வீணையும் எவராலும் விரும்பப்படும் இணைக் கருவிகள் என்ற குறிப்பினையே ஈண்டு ஆசிரியர், “அவாம் குழல் வீணை” என்றனர்.  குழல் எவராலும் விரும்பப் பட்டதை ஆனாய நாயனார் புராணத்துள் சேக்கிழார் நன்கு எடுத்து இயம்பியுள்ளனர்.

        ஆனிரைகள் அறுகருந்தி
            அசைவிடா தணைந்தயரப்
        பானுரைவாய்த் தாய்முலையில் 
            பற்றும்இளங் கன்றினமும்
        தானுணர்வு மறந்தொழியத்
            தடமருப்பின் விடைக்குலமும்
        மான்முதலாம் கான்விலங்கும்
            மயிர்முகிழ்த்து வந்தணைய

        ஆடுமயில் இனங்களும்அங்
            கசைவயர்ந்து மருங்கணுக 
        ஊடுசெவி இசைநிறைந்த
            உள்ளமொடு புள்ளினமும்
        மாடுபடிந் துணர்வொழிய
            மருங்குதொழில் புரிந்தொழுகும்
        கூடியவன் கோவலரும்
            குறைவினையின் துறைநின்றார்

        பணிபுவனங்களில் உள்ளார்
            பயில்பிலங்கள் வழிஅணைந்தார்
        மணிவரைவாழ் அரமகளிர்
            மருங்குமயங் கினர்மலிந்தார்
        தணிவில்ஒளி விஞ்சையர்கள்
            சாரணர் கின்னரர் அமரர்
        அணிவிசும்பில் அயர்வெய்தி
            விமானங்கள் மிசைஅணைந்தார்