New Page 1
பொருள்கள் குழல்
இசையை அனுபவித்ததையும், ஆயர்கள் உற்ற நிலையினையும் அழகுற அருளாள தாசர் தமது ஸ்ரீமகா பாகவதத்துள்,
கரும்புருவம் நெறித்தெழில்சேர்
கடைக்கண் ணோக்கிக்
கண்ணபிரான் ஊதுகுழல்
கானம் கேட்டே
அரம்பைஉருப் பசியொடு
மேன கைஇலங்கு
அழகுசெறி திலோமைத்தயோ
டனேக மாதர்
கரும்பிரத மொழியினர்கள்
வளைகள் சோரக்
கலைநெகிழக் குழல்அவிழக்
கடிதின் எய்தி
விரும்புறவே நோக்கிஉலை
மீது வைத்த
மெழுகெனவே மெய்ம்மறந்தங்
குருகி நின்றார்
இருகரங்கள் இலங்கமழை
எழுலி போன்ற
இறைஊதும் குழல்அமிர்த
கீதம் கேட்டே
கெருடகாந் தருவர்உயர்
இயக்கர் கேழில்
கின்னரர்கிம்
புருடர்எழில் மிக்க தூய
உருவுடைய தும்புருநா ரதர்கள்
வித்தி
யாதரர் களும்வந் தெய்திக்
கையில்
மருவியகின் னரிஇணை
யில்வீணை சோர
மதிம யங்கிச்சித்
தரம்போல் நின்றார்
வடிவுடைய மதனன்என வயங்கு
கண்ணன்
வாயினுறு வேயின்இசை
செவியின் வாய்ப்ப
அடவிதனில் அழல்வளர்த்து
வருந்திச் செய்யும்
அருந்தவங்கள்
ஒருவியோ கிகளம் ஒக்கக்
கடலினுறும் அமிர்தம்மக
அவிஈ தெல்லாம்
கைத்திடவான் அமரர்களும்
கடிதின் எய்தி
உடலுருகி ஆனந்த வாரி
சோர
உறல்நோக்கி மெய்மறந்தோ
வியம்போல்
நின்றார்
கோகிலங்கள் பிணிமுகங்கள்
கபோதம் பூவை
கொஞ்சுசுகம் ஓதிமம்நீள்
குரண்டம் நாரை
போகமிகும் அன்றில்புதா
இனங்கள் பார்ப்போ
டசுணப்புள் இவைக
ளெல்லாம் கடிதில்
|