| 
ம
 
மானினங்கள் மேய்ந்த 
புல்லும் கடைவாய் சோர 
    மகிழ்ந்திருகண் ணால்அமையப் 
பார்த்து நிற்க 
ஆனிரைகள் செவிநெறித்து 
முலைப்பால் சோர 
    அகம்குழைந்து கன்றினுடன் 
நோக்கிற் றம்மா 
    மாயவன்தன் 
வாயினிடை வேயைவைத்து  
        மகிழ்ந்தினிதின் 
ஊதஎழுகீதம் கேட்ட 
    ஆயர்மட வார்கள்எலாம் 
உருகி நெஞ்சம் 
        ஆவிதளர்ந் தேஒன்றும் 
அறியார்ஆகி 
    ஏயெனும்முன் குழல்ஓசை 
நெறியின் எய்தி 
        இடைதுவளக் 
கலைநெகிழ வளைகள் சோரத் 
    தூயகுழல் அவிழஇமைப் 
போதின் முன்னர் 
        துலங்குபர மன்தனைத்தான் 
சூழ்ந்தார் அன்றே 
    கறந்தநிறை பால்கலசம் 
தரையில் வையார் 
        கவிழ்ந்துடைய 
ஏறிந்தோடிக் கடிதில் சென்றார் 
    சிறந்தஅனம் அருந்துகரம் 
நீரில் காட்டார் 
        தியங்கிமனம் 
தடுமாற விரைவில் சேர்ந்தார் 
    துறந்துதுயில் அனந்தலுடன் 
பாறி னார்கள் 
        சோறொருவற் 
கிடுவமுன்னே துளங்கித் தம்மெய் 
    மறந்தும்மதி மயங்கிவல்லை 
ஏகி னார்கள் 
        மாலெழுவார் 
தமைத்தடுக்க வல்லார் யாரே 
என்று பாடி இருப்பதையும் 
படிக்கும்போது, குழல், “அவாங்குழல்” என்று அடை கொடுத்துச் சிறப்பித் திருப்பது பொருத்தம் அன்றோ !  
    இவ்வாறே  வீணையின்  இசையும்  விரும்பப்படுதலைச்  சீவகசிந்தாமணிப்  பாடலால் அறிந்து கொள்ளலாம், 
அண்ணலியாழ் நரம்பை 
ஆய்ந்து மணிவிரல்தவழ்ந்த  
                                          வாறும் 
விண்ணிய இலயம் பற்றிப் 
பாடிய வனப்பு நோக்கி 
மண்ணவர் வீணை வீழத்தார் 
விஞ்சையர் கனிந்து  
                                        சோந்தார் 
பண்ணவர் மருளின் மாய்ந்தார் 
சித்தரும் மனத்துள்  
                                        வைத்தார் 
 |