பக்கம் எண் :

696

             சிறுபறைப் பருவம்

வீழ்மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை
சூழ்மணிக் கோங்கு வீணைச் சுகர்புரி நரம்பு நம்பி
ஊழ்மணி மிடறும் ஒன்றாய்ப் பணிசெய்தவாறு நோக்கித்
தாழ்மணித் தாம மார்பின் கின்னரர் சாம்பி னாரே

விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த
மண்ணவர் மகிழ வான்கண் பறவைமெய்ம் மறந்து சோர
அண்ணல்தான் அனங்கன் நாணப் பாடினான் அரசர் எல்லாம்
பண்ணமைத் தெழுதப் பட்ட பாவைபோல் ஆயி னாரே

என்னும் பாடல்களைப் படித்து இன்புறுவோமாக.

    பண்ணார்ந்த வீணைபயின்றானே, “மழலை வீணையர்” “கொண்டதோர் வீணையினான்” என்றும், “தம் கையில் வீணை வைத்தார்” வீணை பாணிசெய் குழகர் போலும்” எம்இறைநல் வீணை வாசிக்குமே. “வீணைகள் பாடும் விகிர்தனார்” “வீணைபயின்றவன்” கைக் கிளரும் வீணை புலவன் கண்டாய்” “வேதத்தொலிகொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே” “பண்ணார்ந்த வீணை பயின்றான் தன்னை” வீணையோடு மிக்குபாடல் மிக்க “கையவன்” “சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார். “மிகு நல்ல வீணை தடவி” என்றெல்லாம் திருமுறைகளில் கூறப்பட்டது கொண்டும் உணரவும்.

    சேக்கிழாரது கவிகள் அருட் கவிகள் என்பது முற்றிலும் உண்மை.  இறைவன் அடி எடுத்துக் கொடுக்க அத்திருவருள் கொண்டு பாடியதனால் அருட் கவி ஆயின.  அருட்கவிகளாகிய அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், முதலான திருமுறை ஆசிரியர்களின் அருட்கவிகளுடன் இவரது கவிகள் அடங்கிய நூலும் திருமுறைகளில் ஒன்றாக இணைத்திருப்பதனாலும், இவரது பாடல் அருட்கவி என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம் ;  நிறுவலாம்.