பக்கம் எண் :

 

       சிறுபறைப் பருவம்

697

    இறைவனது திருவருட் பெற்றவர்களின் அருட் கவிகளின் பொருள்களை எல்லாம் தம் நூலில் புகுத்திப் பாடல்களைப் பாடி இருத்தலினாலும், இவரது பாடல் அருட்கவிதானே ! 

    “ஐந்து பேர் அறிவும்” என்று தொடங்கும் இவரது பாடல், குமர குருபர சுவாமிகட்கு ஞானசாரியானது திருவருள் உண்டாகத்துணையாய் நின்றது என்பதை உணரும்போது, இவரது கவிகள் அருட்கவிகள்தாமே !  வேறு என்ன வேண்டும் இவர் அருட்கவி பாடிய புலவர் என்பதற்கு.?

    அனபாயச் சோழன் கடலில் பெரியது எது? மலையில் பெரியது எது !  உலகில் பெரியது எது? என்றுதன் அவைக்களப் புலவர்களைக் கேட்டபோது, அங்கிருந்த புலவர்கள் எவரும் அவ்வினாக்களுக்கு விடை தர இயலாது விழித்த போது, நமது சேக்கிழார் பெருமான் அல்லரோ ! 

        “பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
         நன்மை கடலில் பெரிது” என்றும்,

        “நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்”
         மலையின் மாணப் பெரிது” என்றும்,

        “காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்   
         ஞாலத்தின் மாணப் பெரிது”

என்றும்,

    விடை இறுத்தனர் !  ஆகவே, இவர் பெரும் புலவர் தாமே ! எனவே, திரு பிள்ளை அவர்கள் சேக்கிழாரைப் புலவன்” என்றனர்.                                         

(87)