பக்கம் எண் :

தந

 

           பாயிரம்

7

தந்தையாக் கொண்டு அன்பர்கள் புத்திர நிலையில் நின்று வழிபடல், இறைவனை எசமானனாகக் கொண்டு, தாம் பணியாளராக நின்று வழி படல், இறைவனைத் தம் நண்பனாகக் கருதிப் போற்றுதல் இறைவனை ஞானாசாரியனாகக் கொண்டு தாம் மாணவராக இருந்து வழி பாடாற்றுதல் ஆகிய இந் நால் நெறி இறைவனை அடைவதற்கு வாயில்களாகும் என்பதை முன்கூட்டி அறிவிக்கவே, அருண்மொழித் தேவர், தமது முதற் செய்யுளில் ஒவ்வோர் அடியிலும் நாற்சீர்களை அமைத்துப் பாடலைப் பாடினார் என்பார், “ நாற்சீரினால் நால் நெறி விளக்கி ஒளிர் சேக்கிழார்” என்றனர்.  ‘உலகெ லாம்உணர்ந் தோதற்கரியவன்’ என்னும் அடியில் நான்கு சீர்கள் இருத்தலைக் காண்க.  இவ்வாறேஏனைய மூன்று அடிகளிலும் நான்கு சீர்கள் பொருந்தி இருத்தலை உணர்க.

    சேக்கிழார் எண்ணூறு ஆண்டுகட்கு முன்பு இருந்தவரேனும், அறிஞர் உள்ளத்தில் இன்றும் நிலவி இருத்தலின், ஒளிர் சேக்கிழார் எனப்பட்டார்.  “தமிழ்” என்றது ஈண்டுச் சேக்கிழார் மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல் ஆகும்.  ஆகுபெயராக நூலை உணர்த்தியது.  தமிழ் ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி வேதப் பொருளாய் மிக விளங்கித் தீதற்றோர் உள்ளுதொறும் உள்ளுதொறும் உருக்கும் தன்மையதாய் இருத்தலின் நற்றமி்ழ் எனப்பட்டது.

    செய்யுளைத் தொடங்கும் போது, மங்கலச் சொல்லை முன் அமைத்துத் தொடங்க வேண்டும் என்பது பின் வந்த பாட்டியல் இலக்கணமரபாகும்.  அம்முறைப்படி மா என்னும் மங்கலமொழி பெற்றுச் செய்யுள் தொடங்கப் பெற்றது.

    இப்பாட்டின் முதல் எட்டடிகளின் திரண்ட பொருள், விநாயகப் பெருமான் விராட் சொரூபம் கொண்டபோது படிப்படியே, வானத்தில் உள்ள பிறைச்சந்திரன் விநாயகருக்குள்ள முடிப்பி்றையோடு தானும் ஒரு முடிப்பிறையாகவும், விநாயகர் வாயிலில் உள்ள தந்தத்தோடு தானும் ஒரு கோடாக அமைந்து வாயிற் கொம்புகள் இரண்