பக்கம் எண் :

மனுந

702

             சிறுபறைப் பருவம்

    மனுநீதிச்  சோழன்  மகன்   வீதிவிடங்கன்   கன்றைக்   கொன்ற   பாவத்தினைத் தீர்ப்பதற்குரிய வழியினைக் கூறிய மந்திரிகள், மறையுணர்ந்த அந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம் என்றனர்.  அதுபோது மன்னன் அவ்வமைச்சர்கட்குக் கூறிய மொழிகள் அவர்கட்குப் புத்தி புகட்டும் முறையில் அமைந்திருப்பதைக் காணலாம்.

        வழக்கென்று நீர்மொழிந்தால்
            மற்றதுதான் வலிப்பட்டுக்
        குழக்கன்றை இழந்தலறும்
            கோவுறுநோய் மருந்தாமோ
        இழக்கின்றேன் மைந்தனைஎன்
            றெல்லீரும் சொல்லியஇச்
        சழக்கின்று நான் இசைந்தால்
            தருமம்தான் சலியாதோ

மாநிலம் காவலன் ஆவான் மன்னுயிர் காக்கும் காலைத்
தானதனுக் கிடையூறு தன்னால் தன்பரி சனத்தால்
ஊனமிகு பகைதி றத்தால் கள்வரால் உயிர்கள் தம்மால்
ஆனபயம் ஐந்தும்தீர்த் தறம்காப்பான் அல்லனோ

        என்மகன்செய் பாதகத்துக்
            கிருந்தவங்கள் செயஇசைந்தே
        அன்னியன்ஓர் உயிர்கொன்றால்
            அவனைக்கொல் வேனானால்
        தொன்மனுநூல் தொடைமனுவால்
            துடைப்புண்ட தெனும்வார்த்தை
        மன்னுலகில் பெறமொழிந்தீர்
            மந்திரிகள் வழக்கென்றான்

என்ற பாடல்களைப் பார்க்கவும்.

    பெருமிழலைக் குறும்ப நாயனார் சுந்தரர் பாதம் போற்றி எல்லாச் சித்திகளும் கைவரப் பெற்றார் எனச் சித்திதரும் பாடலாக,

நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணிமாதி சித்தியான அணைந்தற்பின்