பக்கம் எண் :

மூளும

 

       சிறுபறைப் பருவம்

703

மூளும் காதல் உடன்பெருக முதல்வர்நாமத் தைந்
                                        தெழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசுவாய்ப்பக்
                                        கெழுமினார்

என்று பாடிக் காட்டியதைக் காண்க.

    தீர்த்தமானது தூய்மை செய்வதாகும்.  உடல் மாசைப் போக்குவதுடன் உள் மாசையும் போக்கவல்லது.  இது குறித்தே தீர்த்த யாத்திரையினை மக்கள் மேற்கொள்வர்.  மூர்த்தியைப் போலத் தலத்தைப் போலத் தீர்த்தமும் விசேட முடையது என்ற கருத்தில்தான் தாயுமானவர்,

மூர்த்திதலம் தீர்த்தம் முறையால் தொடங்கினர்க்கோர்
வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே

என்று உணர்த்தியருளினார்.  ஆகத் தீர்த்தம் சுத்தி தருவது போலச் சேக்கிழார் கவியும் சுத்திதரும் கவியாகும்.

    திருநாளைப் போவார் நாயனார் தமது பிறப்பு மாசுடையது என்று கருது இருந்ததனால், அக் கருத்தை ஒழித்து அவர் தூய உடல் பெருமாறு தீயில்  மூழ்கிவர இறைவன் இட்ட கட்டளையின் படி, நாயனார் தீயில் மூழ்கி மாசு போக்கி எழுந்ததைச் சேக்கிழார்,

கைதொழுது நடமாடும் கழல்உன்னி அழல்புக்கார்
எய்தியஅப் பொழுதின்கண் எரியின்கண் இம்மாயப்
பொய்தகையுப் உருஒழித்தும் புண்ணியமா முனிவடிவாம்
மெய்திகழ்வெண் நூல்விளங்க வேணிமுடி கொண்
                                        டெழுந்தார்

என்று பாடிய பாட்டால் சுத்திதரும் பாடல் பாட வல்லவர் என்பதை அறியலாம்.

    சேக்கிழார் முத்தி தரும் பாடல்கள் பாடியவர் என்பதும் அவர்தம் புராணத்துள் நன்கு காணலாம்.

        ஞானம் உண்டார் கேட்டருளி
            நல்லஇசையாழ்ப் பெரும்பாணர்க்
        கானபடியால் சிறப்பருளி
            அமரும் நாளில் அவர்பாடும்