பக்கம் எண் :

8

 

       சிறுபறைப் பருவம்

705

8.    கனிவில் எமைப்பொரு வார்களும் நெஞ்சு
           கரைந்து கரைந்துருகக்
       காமரு பத்தியும் வயிராக் கியமும்
           கவினக் குதிகொள்ளத்
       தனிவில்பொன் மேருவெ னக்கொடு திரிபுர
           தகனம் புரிபெருமான்
       தயங்குபொன் அம்பலம் நின்றுபல் லோர்அஞ்
           சலிசெய நடம்நவில
       நனிவில் இடும்புகழ் மிகுசம் பந்தரும்
           நாவுக் கிறையவரும்
       நாவலர் கோவும் சிரம்கரம் கம்பிதம்
           நன்கு புரிந்தருள
       முனிவில் தமிழ்க்கவி பாடிய புலவன்
           முழக்குக சிறுபறையே
       முழுமணி மாடக் குன்றத் தூரன்
           முழக்குக சிறுபறையே.

    [அ. சொ.] கனிவில் - மனக்கனிவில்லாத, பொருவார்களும்-போன்றவர்களும், காமரு-அழகிய, வைராக்கியம்-உலக ஆசை இல்லாமை, கவின - அழகுற, குதிகொள்ள-நடனம் செய்ய, தனி-ஒப்பற்ற,   கொடு-கொண்டு,   திரிபுரம்-முப்புரங்களை,   தகனம் புரிபெருமான்-எரித்த சிவபெருமான், தயங்கு-விளங்கு, நடம்-நடனம், நவில-செய்ய, நனி-மிகவும், வில்இடும்-ஒளிவிடும், நாவலர்கோ-சுந்தர மூர்த்திசுவாமிகள், கம்பிதம் அசைவு, முனிவு-வெறுப்பு, சிரகரகம்பிதம்-தலை அசைவு, கையசைவு.

    விளக்கம் : திரு பிள்ளை அவர்கள் மிகவும் கனிவுடையவர் என்பது அவரது திருவாக்கான கனிவில் எமைப்பொருவார்களும் என்று கூறியிருப்பதுகண்டு உணர்கிறோம்.  கனிவு இல்லாத என அடக்கம் தோன்றக் கூறினார்