என
எனினும் அமையும். வைராக்கியம்
என்பது உலகப் பொருளில் வரும் வெறுப்பாகும்.
அப்பர்
பெருமானார்முன் அரம்பையர் ஆடினர். பொன,் மணி முதலியனவும் அவர்முன் காணப்பட்டன. அதுபோதும்
அவர்,
இத்தன்மை அரம்பையர்கள்
எவ்விதமும் செயல்புரிய
அத்தனார் திருவடிக்கீழ்
நினைவகலா அன்புருகும்
மெய்த்தன்மை உணர்வுடைய
விழுத்தவத்து மேலோர்தம்
சித்தநிலைதிரியாது செய்பணியில்
தலைநின்றார்
செம்பொன்னும் நவமணியும்
சேண்விளங்க ஆங்
( கெவையும்
உம்பர்பிரான் திருமுன்றில்
உருள்பருக்கை உடன்ஒக்க
எம்பெருமான் வாகீசர்
உழவாரத் தினில்எந்தி
வம்பலர்மென் பூங்கமல
வாவியினில் புகஎறிந்தார்.
இவை போன்ற செய்கைகள்
வைராக்கியமாகும்.
மேருமலை பொன்னிறம்
உடையது. அதனது பொன்னிறம், ஒளி ஒப்பற்றவை. ஆதலின், தனிவில் பொன்மேரு என்றனர்.
மேலும், கல்லாகிய மேரு வில்லாக இறைவனுக்குப் பயன்பட்டமையின், தனிவில் எனச் சிறப்பிக்கப்பட்டது
எனினும் ஆம். மேரு கற்சாபம் என்பதை இரட்டையர்கள் “நாண் என்றால் நஞ்சிருக்கும் நற்சாபம்
கற்சாபம்” என்றதைக் காண்க.
மேரு ஒப்பற்றது என்பது
தன்னைச்சார்ந்த எதையும் தன்னிறம் ஆக்குவதால் என்க, இதனைத் திருமந்திரம்,
சயிலலோ கத்தினைச்
சார்ந்த பொழுதே
சயிலம தாகும் சராசரம்
போல
எனக் கூறுதல் காண்க.
|