பக்கம் எண் :

என

708

             சிறுபறைப் பருவம்

என்ற இடத்து, நெடுமாறனுக்குத் திருஞானசம்பந்தர் திருப்பெயர் திருமந்திரமானதையும், திருநாவுக்கரசர் திருப்பெயரையும் திருமந்திரமாக அப்பூதி அடிகளார் கொண்டிருந்ததைச் சேக்கிழார்,

        வடிவுதாம் காணா ராயும் மன்னுசீர்
            வாக்கின் வேந்தர்
        அடிமையும் தம்பி ரானார் அருளும்கேட்
            டவர்நா மத்தால்
        படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள்
            முதலாய் உள்ள
        முடிவிலா அறங்கள் செய்து முறைமையால்
            வாழும் நாளில்

என்று பாடியுள்ளனர்.  இச் செய்யுட்கு விளக்கம்போல நால்வர் நான்மணிமாலை நூலாசிரியர்,

உற்றான் அலன்தவம் தீயின்நின் றான்அலன் ஊண்புனலா
அற்றான் அலன்நுகர் வும்திரு நாவுக் கரசெனும்ஓர்
சொற்றான் எழுதியும் கூறியுமே என்றும் துன்பில்பதம்
பெற்றான் ஒருநம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே

என்று பாடி இருப்பதையும் காணவும்.

    திருநாவலூரர் தம் பெற்றோர்களால் நம்பி ஆரூரர் என்று பெயரிடப்பட்டவர்.  அங்ஙனம் பெயரிட்ட நிலையினைக் குறிக்க வந்த இடத்துச் சேக்கிழார், “தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பியாரூரர் என்ற நாமமும் சாற்றி” என்று பாடினர்.  இங்ஙனம்  பாடியதற்குக் காரணம், இத் திருநாமத்தையே மகா மந்திரமாகக் கொண்டு எண்வகைச் சித்திகளைப் பெருமிழலைக் குறும்பர் பெற்றார் ஆதலின், இப்பெயரை மந்திரமாகக் கொண்டார் என்பதை,

“நாளும் நம்பி ஆரூரர் நாமம் பயின்ற நலத்தாலே
 ஆளும் படியால் அணிமாதி சித்தி ஆன அணைந்ததன்பின்”

என்று குறிப்பிட்டுள்ளனர்.  ஆகவே, இம் மூவரும் நனி வில் இடும்புகழ் உடையார் என்பது உண்மை அன்றோ?