இம
இம் மாண்புக்குரிய
மூவர் முதலிகளும் சேக்கிழாரது கவியைக் கண்டு கரமும் தலையும் அசைக்கும் வண்ணம் கவி பாடிய
பெருமைக்குரியவர் சேக்கிழார் என்றனர் திரு பிள்ளை அவர்கள்.
திருஞான சம்பந்தர்
கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும், திருநாவுக்கரசர், கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடையிலும்,
திருநாவலூரர் கி. பி. 9-ஆம் நூற்றாண்டிலும் இருந்தவர்கள். சேக்கிழார் கி. பி. 12-ஆம் நூற்றாண்டினர்.
இவ்வாறு இருக்க மூவர் முதலிகள் சிரக்கம்பம் கரக்கம்பம் எவ்வாறு செய்தனர் என நினைக்கலாம்.
அவர்கள் பருவுடல் நீத்திருந்தாலும் நுண்ணுடல் உடையராய், என்றும் திகழ்தலின், இங்ஙனம் சிரக்
கம்பம் கரக் கம்பம் செய்ததாகத் திரு பிள்ளை அவர்கள் கூறினர் என்க. மெய்யடியார்கள்
மறைந்தும் மறையாதவர்களே !
சைனர்களும் பௌத்தர்களும்
வடமொழிப் பற்றுடையவர்கள். அவர்கள் தமிழைப் பயின்று தமிழ் நூல் பல இயற்றினர். கிறித்தவர்களும்
முஸ்லீம்களும்வேற்று நாட்டவர், வேற்று மதத்தவர் என்றாலும், தமிழ் மொழியை நன்கு விருப்புடன்
பயின்று தமிழ் அன்னைக்கு நூல்கள் பல தமிழில் இயற்றி நற்றொண்டு புரிந்தனர். சிந்தாமணி சைனகாவியம்,
மணிமேகலை புத்த காவியம் தேம்பவாணி சிறிஸ்தவக் காவியம், சீறாப் புராணம் முஸ்லீம் காவியம்.
இங்ஙனம் பிற மதத்தினராலும் தமிழ் போற்றப் பட்டு, விரும்பப்பட்டு இருத்தலின் தமிழ்
முனிவில் என்ற அடை கொடுத்துப் பேசப்பட்டது.
இறைவன்
முப்புரங்களை எரித்த வரலாறு, வித்துயுன்மலி, விரூபாட்சன், கமலாக்கன் என்னும் மூன்று அரக்கர்கள்,
பொன், வெள்ளி, இரும்பாலாகிய இயங்கும் கோட்டையில் பறந்து தேவர்களுக்கும் முனிவர்கட்கும்
துன்பம் செய்து, வந்தமையின் இறைவர் தேவர் முனிவர்களின் வேண்டுகோட்கு இணங்கி அவர்களது கோட்டைகளை
அழித்து, அவ்
|