ம
மான, வயங்குறு-விளங்குறும்,
கண்டம்-எழுத்தாணி மாண்பு-மாட்சிமை, ஆர்-பொருந்திய, பிந்து-எழுத்தின் மேல்புள்ளி, பிந்து
வரைந்த எழுத்து-மெய் எழுத்து, பெயராது - போகாதபடி, விட்டுவிடாதபடி அக்கரம் - அழியாதது, தேற்றுபு-தெளியும்படி
செய்து, பெட்கும்-கற்க விரும்பும், மாறாதே-ஓய்வின்றி. வேறுபடுத்தாமல்.
விளக்கம் : சேக்கிழார்
பெருமானார் பெரிய புராணம் இயற்றத் தில்லை வந்துற்றனர். இறைவன் திருவருளால் புராணத்தைப்
பாடவும் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அனபாயன், அப்புராணம் எந்த அளவில் முடிந்துளது என்பதனை
அடிக்கடி ஆளை ஏவி அறிந்து வருமாறு செய்தனன். இதன் கருத்து அப்புராணத்தைச் செய்யுள் வடிவில்
காணவும், கேட்கவும் அவன் கொண்டிருந்த பேராவா எந்த அளவுக்கு இருந்தது என்பதைக் குறிப்பதாகும்.
அனபாயன் அடிக்கடி தூதரை ஏவிப் புராணம் எந்த அளவு என்று முடிந்துளது அறிய அவாவுற்றனன் என்பதை,
சேவை காவலர் புராண
காதைதொகை
செயநி னைந்தைமை
அகன்றபின்
யாவர் தாம்அரு
கிருந்த பேர்கள்கதை சென்ற
தெவ்வளவி ருந்ததெங்
காவ தென்இவைகள்
அறிய வேண்டும
தறிந்து வாரும்என
வளவர்கோன்
ஏவி னானுரிய தூதர்
தூதர் அறி
யாமல் ஒற்றரையும்
ஏவினான்
என்று உமாபதியாரும்
உரைத்தருளினார்.
இக்கருத்தினையே முதலடிகள்
உணர்த்துகின்றன, சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதத் தொடங்கிய மணிக்கால் மண்டபத்தை இன்னும்
தில்லையில் காணலாம் திருவாதிரை நாளில், ஆனித் திருமஞ்சன நாளில் நடராசப் பெருமானுக்குத் திருமுழுக்கு
அலங்காரம் முதலியன நடைபெறும் இடம் இதுவே ஆகும். கையேடு ஈண்டுப் பனை ஓலை ஏடுகளாகும். தொண்டர்
புராணத்தை எழுதும் வாய்ப்பினை
|