பக்கம் எண் :

712

             சிறுபறைப் பருவம்

எழுத்தாணி பெற்றமையின் “மாண்பு ஆர் கண்டம்” என்றனர்.  சேக்கிழார் மொழியினை எதிர் நோக்கி ஏடும் கையுமாக அவாவுடன் எழுத்தாளர்கள் இருந்தனர் என்ற குறிப்பை, “வயங்குறு கையேடு” என்ற தொடரில் விளங்க வைத்தனர்.

    திருமுறைகளை எழுதுவதை அவாவுடன் மேற் கொண்ட தொண்டர்கள் உண்டு என்பதைச் சேக்கிழாரே, கணநாத நாயனார் புராணத்துள்,

    நல்ல நந்தன வனப்பணி செய்பவர்
        நறுந்துணர் மலர்கொய்வோர்
    பல்ப ணித்தொடை புனைபவர் கொணர்திரு
        மஞ்சனப் பணிக்குள்ளோர்
    அல்லு நன்பக லும்திரு அலகிட்டுத்
        திருமெழுக் கமைப்போர்கள்
    எல்லை யில்விளக் கெரிப்பவர் திருமுறை
        எழுதுவோர் வாசிப்போர்

என்று குறித்துள்ளனர்.

    ஈண்டு ஓர் அரிய குறிப்பை நமது திரு பிள்ளை அவர்கள் தந்துள்ளனர்.  அதாவது சேக்கிழார் பெருமானார் கவிகளைச் சொல்லிக்கொண்டே வர, ஏடு எழுதுவோர் எழுதிக் கொண்டே வந்தனர் என்பதாம்.  இதனை, “கையேட்டின் மாண்பார் கண்டம் கொண்டங் கெழுதுநகர் மாறாதே எழுத” என்ற தொடரில் காண்க.  இக்குறிப்பு உமாபதி சிவாசாரியார் பாடியுள்ள சேக்கிழார் புராணத்துள் இல்லை.  ஆண்டுச் சேக்கிழாரே தம் திருக்கரத்தால் எழுதி முடித்தனர் என்ற குறிப்புக் காணப்படுகிறது.  இதனை,

காண்டம்இரண் டாவகுத்துக் கதைப்பரப்பைத்
                                       ( தொகுத்துக்

    கருதரிய சருக்கங்கள் பதின்மூன்றா நிலையிட்
டீண்டுரைத்த புராணத்தில் திருவிருத்தம் நாலா
    யிரத்திருநூற் றைம்பத்து மூன்றாக அமைத்துச்