New Page 1
கோண்டகைய திருத்தொண்டர்
புராணம்எனப் புராணத்
திருமுறைக்குத் திருநாமம்
சீர்மைபெற அமைத்திட்பின்
டாண்தகைமை பெறஎழுதி மைக்காப்புச்
சாத்தி
அழகுபெறக் கவளிகையும்
அமைத்ததில்லைத் ததன்
என்ற பாட்டின் ஈற்றில்
உள்ள இரண்டடிகளில் காணலாம்.
பெரிய புராணத்துள்
உள்ள ஒவ்வோர் எழுத்தையும் விடாது கூட்டிச்சேர்த்து எடுத்து எழுதப்பட்டிருத்தலின், “பிந்து வரைந்த
எழுத்தினுள் ஒன்றும் பெயராது,” என்றனர். அவ்வெழுத்துக்களில் அமைந்த பொருள் அழிவில்லாத
பொருள். எவராலும் அசைக்க முடியாத பொருள். இது குறித்தே, “அக்கரமாம் பெயர்ப் பொருள் தேற்றுபு”
என்றனர். அச்கரமாம் என்பதற்கு எழுத்து என்ற மேற்பொருள் இருப்பினும், அழிவில்லாதது என்ற
உட்பொருளும் இருத்தலின், பெரிய புராணப் பொருள் அழிவில்லாதது என்ற கருத்துத் தொனிக்க,
“அக்கரமாம்” என்ற தொடரை அமைத்தனர் திரு. பிள்ளை அவர்கள்.
சிவனடியே சிந்திக்கும்
திருப்பெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும்
பாங்கினில்ஓங் கியஞானம்
உவமைஇலாக் கலைஞானம்
உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்
தாம்உணர்ந்தார் அந்நிலையில்
காழியார் தவமே கவுணியர்
தனமே கலைஞானத்
தாழிய கடலே அதனிடை
அமுதே அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை
வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திரு
வருள்பெற் றனைஎன்பார்
என்பன போன்ற சேக்கிழாரின்
பாடல்களின் பொருள் என்றேனும் அழிக்க முடியும் நிலையினை உறுமோ? உறாது. ஈண்டு ஒளவையாரின்
பெரு மிதப் பாடலாகிய,
நூற்றுப்பத் தாயிரம்
பொன்பெறினும் நூல்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள்
நைந்துவிடும்-மாற்றலரைப்
பொன்றப் பொருதடக்கைப்
போர்வேல் அகளங்கா
என்றும் கிழியாதென்
பாட்டு
என்பதையும் நினைவுபடுத்திக்
கொள்ள வேண்டும்.
|