பர
பரிவாய்இன்
மொழிதொடுத்து வருணித்தோர்க்கு
அகம்மகிழ்ந்தோர்
பயனும் நல்கா
விரிவாய தடங்கடலே
நெடுங்கழியே
அடுங்கான விலங்கே
புள்ளே
பொரிவாய பராரைமர
நிரையேவான்
தொடுகுடுமிப்
பொருப்பே வெம்புப்
எரிவாய
கொடுஞ்சுரமே எனஇவற்றோர்
அஃறிணையொத் திருந்தான்
எந்தாய்
என்னைஇகழ்ந் தனனோசொல்
வடிவாய்நின்
இடம்பிரியா
இமயப் பாவை
தன்னையும்சொல்
பொருளான உன்னையுமே
இகழ்ந்தனனென்
றனக்கியா தென்னா
முன்னைமொழி்ந் திடைக்காடன்
தணியாத
முனிவீர்ப்ப முந்திச்
சென்றான்
அன்னவுரை திருச்செவியின்
ஊறுபா
டெனஉறைப்ப
அருளின் மூர்த்தி
இடைக்காடர் பின் சென்று
வைகையின் தென்கரையில் உமையுடன் வீற்றிருக்கலானார்.
திருமழிசை ஆழ்வார்
தமது மாணவன் கணிகண்ணனுடன் காஞ்சியில் இருந்தபோது, அரசாண்ட மன்னன், கணிகண்ணனிடம் தன்மீது
பாட்டுப் பாடவேண்டும் என வேண்டினன். அது செய்ய மறுத்த கணிகண்ணனைத் தன்னாட்டில் இருத்தல்
கூடாது எனக் கட்டளைப் பிறப்பிக்க, அதனைத் தன் ஆசிரியரிடம் கூற, அவர் நீ இங்கு இருக்கக்
கூடாது என்றால் நான் மட்டும் இங்கு இருக்கலாமா? பெருமாளும் இங்கு இருக்கலாமா என்று கூறி எழுந்து
பெருமாளிடம் சென்று,
“கணிகண்ணன்
போகின்றான் காமரும்பூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா-துணிவுடையை
செந்நாப் புலவன்யான்
செல்கின்றேன் நீயும்உன்றன்
பைந்நாகப்
பாய்சுருட்டிக் கொள்”
என்று பாடியதும் பெருமாளும்
தன் பிராட்டியுடன் அவர் பின் சென்றார் என்றும் கூறப்படுகிறது. இதனைக் குமர
|