பக்கம் எண் :

10

10.    சிறுதேர்ப்பருவம்

1.     மருவாய் நறுந்தா தகித்தொங்கல் வளவர்கோ
           மகனுடன் இவர்ந் திருகையும்
       மணிக்கவரி வாங்கிவீ சக்கற்ப கப்பூ
           மகிழ்ந்துவா னாடர் தூற்றப்
       பெருவாய் திறந்துபட கம்பேரி முதலாம்
           பெரும்பணை எலாம் முழங்கப்
       பிறங்குமூ வாயிரவர் முதலியோர் மறையொலி
           பிறங்கத் தொடர்ந்து போதக்
       கருவாய் உறாமற்றை யாரும் தலைக்குமேல்
           கைகுவித் தேத்தி மேவக்
       கருதும் புராணமுடி வில்குஞ் சரத்தில
           கடத்திவர்ந் தோங்கு தில்லைத்
       தெருவாய் உலாப்போது சேவையர் குலாதிபன்
           சிறுதேர் உருட்டி அருளே
       சிறுகோல் எடுத்தரசு செங்கோல் நிறுத்தினோன்
           சிறுதேர் உருட்டி யருளே

    [அ. சொ.] : மருவாய்-வாசனையுடையதாய், நறுந்தாதகி-நல்ல ஆத்தி மலர், தொங்கல்-மாலை, வளவர் கோமகன்-சோழமன்னன் அநபாயச்சோழன், இவர்ந்து-ஏறி மணி-அழகிய, கவரி-வெண்சாமரை, வானாடர்-தேவர்கள் பேரி-வாத்திய வகைகள் பணை-வாத்தியங்கள், பிறங்கு-விளங்கு, மூவாயிரவர் - மூவாயிரம் தில்லைவாழ் அந்தணர், மறை-வேதம். பிறங்க-விளங்க, போத-வர, கருவாய்-தாயின் கருப்பத்தில், உறா-சேராத, ஏத்தி-போற்றி மேவ-உடன்வர.  குஞ்சரத்து யானைமீது. இலகடம்-யானை அம்பாரி, உலா-வீதி வலம், இவர்ந்து -ஏறி அமர்ந்து, சிறு