பக்கம் எண் :

அவன

724

             சிறுதேர்ப் பருவம்

அவன் அருள் வழிப்பட்டுத் தத்தம் மரபில் வரும் குரவர் பலர் நூலையும் தழீஇக் கோடற்கு என்க” என்பது. இக் காலத்தில் இறைவன் உலாப் போதுங்கால் வேத பாராயணம் வருவதுபோல, அடியார்களும் அன்பர்களும் உலாப் போதுங்கால் வேதியர்கள் வடமொழி வேத பராயணம் செய்து கொண்டுவர வேண்டும் என்பது முறையாகும். ஆனால், எங்கே செய்கிறார்கள்? தமிழ் மறை ஓதப்பட்டு வருதல் உண்மை.

    அன்பர்களைக் கண்டதும் அரனென எண்ணி அவர்களை வணங்கவேண்டும் என்பது நமது  சைவசித்தாந்த முடிவு.   இதனைத்தான்  நமது   சிவஞான  போதப் பன்னிரண்டாம் நூற்பா,

    செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
    அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ
    மாலற நேயம் மலிந்தவர் வேடமும் 
    ஆலயம் தானும் அரன்எனத் தொழுமே

என்று  கூறுகிறது.  இங்ஙனம் மாலறநேயம் மலிந்தவர் வேடத்தை வணங்கப்பெற்றவர் மீண்டும் தாயின் கருவில் உறார் என்பது துணிவு ஆதலின், சேக்கிழாரை வணங்கும் அன்பர்கள் கருஉறார் என்ற உறுதிப் பாட்டினை “கருவாய் உறாமற்றையோர்” என்றனர்.  தீவிர அன்புடையவர்கள் குவித்த கையினை எடுக்கவும் பெறார் என்பது பெற்றாம் ஆதலின், “தலைக்குமேல் கைகுவித்து, ஏத்தி, மேவ” என்றனர். குவித்த கையினை எடார் என்பதை மணிமொழியாரும்,

    மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து
        உன்விரையார் கழற்குஎன்
    கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
        வெதும்பி உள்ளம்
    பொய்தான் தவிர்ந்து உன்னைப்போற்றி
        சயசய போற்றி என்னும்
    கைதான் நெகிழவிடேன் உடையாய்
        என்னைக் கண்டுகொள்ளே’