New Page 1
தேவாரத்தில் சிறப்பிக்கப்
பட்டமையின், ஈண்டும், “முறியும் மலரும் பொருவு திருமேனி” என்றனர். உமையம்மையார் இறைவனைத்
தழுவி வழிபட்டதைச் சுந்தரர்,
“எள்கல் இன்றி
இமையவர் கோனை
ஈசனை வழிபாடு
செய்வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை
நங்கை
வழிபடச் சென்று
நின்றவா கண்டு
வெள்ளம் காட்டி
வெருட்டி அஞ்சி
வெருவிஓடித்
தழுவ வெளிப் பட்ட
கள்ளக் கம்பனை
எங்கள் பிரானைக்
காணக்கண்
அடியேன் பெற்ற வாறே
என்று பாடினர். உமை
அம்மையார் இறைவனைக் காஞ்சியம் பதியில் வழிபட்டது. தாம்மட்டும் இறையருள் பெறுவதற்கு மட்டும்
இன்றி, உலகமும் திருவருள் பெறப் பூசையியற்றினர் என்பதைச் சேக்கிழார்,
“ஆன தொல்நகர் அம்பிகை
தம்பெரு மானை
மான அர்ச்சனை
யாலொரு காலத்து வழிபட்
டூன மில்அறம்
அனேகமும் உலகுய்ய வைத்த
மேன்மை பூண்டஅப்
பெருமையை அறிந்தவர் விளம்பில்”
என்று போற்றிப் புகழ்ந்தமையின்
“உலகுய்ய” என்றனர் தழுவுபு என்பது செய்பு என்னும் வாய்பாட்டு வினைஎச்சம்,
கம்பை காஞ்சியில்
உள்ள ஒரு நதி. இது வலிமை மிக்கது என்பதைக் காஞ்சிப் புராணம் தழுவக் குழைந்தப் படலப் பாடல்களால்
அறியலாம்.
மிடைவானவர் திசைகாவலர்
புவிமேலவர் காணூஉக்
கடைநாள்அணு கிற்றால்என
வெருவிக்கலுழ் கண்ணீர்
இடையாறென விரவக்கொடு
வேகத்தொடும் எவ்வெப்
புடைநீர்களும் உடனாகிய
கம்மைப்புனல் வருமால்
படலைக்கரு முகிலும்இடை
இடையேபட ரொளிசேர்
தொடலைக்கதிர்
உடுவும்துவ ளுறுபாசடை விரவும்
இடையில்திகழ்
மலரும்என இலகக் கனமும்உட்
படமிக்கெழு பரவைப்புனல்
பயமுற்றிட வருமால்
|