பக்கம் எண் :

New Page 1

 

       சிறுதேர்ப் பருவம்

731

    செய்யும்இல் வாழ்வார் இல்லம்
        மனைக்குப கரணம் தேம்பூப்
    பெய்தமை தண்ணீர்ப் பந்தல்
        எங்கணும் பிறங்கு சோலை

    இரப்பவர் குருடர்எவ்வம்    
        உற்றவர்ப்பு ரத்தல் வெந்நோய்
    துரக்கும்நல் மருந்து தூவாய்
        மகவினை ஓம்பல் சுண்ணம்
    பரித்தபா கடையே எண்ணெய்
        பைம்புனல் குளிப்ப வேண்டும்
    மருக்கிளர் துவர்க ளாதி
        மலரணைநிலன்ஆன் கன்னி

கடிமணம் விளக்கு மாறாக் கடன்ஒழித் திடுதல் ஈசன்
அடியவர் விழைவ ஈகை அக்கமா மணிவெண் ணீறு
படியிலாக் கடவுள் பூசை உபகர ணங்கள் பாசம்
தடிதரு வேத வாய்மைச் சைவநூல் புராணம் நல்கல்

சிவபிரான் அடிக்கீழ்ப் பத்தி செவிஅறி வுறுத்த லோடும்
உவகையின் அபயம் யார்க்கும் வழங்குதல் உள்ளிட்
                                        டோதும்
நவையிரி அறம்எண் ணான்கும் நாள்தொறும் நிகழ்ச்சி
                                        மாணப்
பவநெறி துரக்கும் ஞானப் பூந்தொடி நிறுவிய பின்னர்

என்று கூறுகிறது.

இறைவனே யாவற்றிற்கும் எவர்க்கும் படியளக்கவல்லான் என்ற குறிப்பு, “அளந்து அப்பிரான் கொடுக்க” என்னும் தொடர் விளக்கி நிற்கிறது ; 

    இறைவன் இறைவிக்கு அறம் வளர்க்க நெல் ஈந்ததை நம் சேக்கிழார், “இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இகபரத்திருநாழி நெல் அளித்து” என்றும்,

    எண்ண ரும்பெரு வரங்கள்முன் பெற்றங்
        கெம்பி ராட்டிதம் பிரான்மகிழ்ந் தருள
    மண்ணின் மேல்வழி பாடுசெய் தருளி
        மனைஅ றம்பெருக் கும்கரு ணையினால்