பக்கம் எண் :

நண

732

             சிறுதேர்ப் பருவம்

    நண்ணு மன்னுயிர் யாவையும் பல்க
        நாடு காதலின் நீடிய வாழ்க்கைப்
    பூண்ணி யத்திருக் காமக்கோட்டத்துப்
        பொலிய ழுப்பதோ டிரண்டறம் புரக்கு

என்றும் குறிப்பிட்டிருப்பதைக் காண்க.

    இறைவி ஒருத்தியே மாதேவி.  இவளது இரு கண்களே இலக்குமியும் சரசுவதியும் எனில், வேறு கூறவேண்டா அன்றே? இதனைத் திருவிளையாடல் புராணம்,

    திருமகள் வலக்கண் வாக்கின்
        சேய்இழை இடக்கண் ஞானம்
    பெருமகள் நுதற்கண் ஆகப்
        பெற்றுவான் செல்வம் கல்வி
    அருமைவீ டளிப்பாள் யாவள்
        அவள்உயிர்த் துணைவன் காண
    ஒருமுலை மறைந்து நாணி ஒசிந்துபூங்
        கொம்பில் நின்றாள்

என்றும், சிவப்பிரகாசர்,

தண்ணார்இதழி புனைவான் விழிஇணை தம்மனைகள்
பண்ணா அழிக்கும்என் றோநின் திருமுகப் பங்கயத்தில்
கண்ணா யினருனக் கவ்வலை மாதும் கலைமகளும்
பெண்ணார் அமுதனை யாய்குன்றை வாழும் பெரியம்மையே

என்றும் போற்றியுள்ளனர்.  ஆக இறைவி மாதேவி என்பது சரதமாம் அன்றோ?

    இறைவிக்குக் காமாட்சி என்னும் திருப்பெயர் அமைந்ததற்கு அவள் ‘கா’ வாகிய சரஸ்வதியையும், ‘மா’ என்னும் இலக்குமியையும் அட்சிகளாகக் (கண்களாக) கொண்டிருப்பதனால்தான் என்பதைக் காஞ்சிப்புராணம்,

    வேறுஒன் றாங்கண் காஎனப் படுவாள்
        வெண்மல ராட்டிமா என்பாள்
    ஊறுதேம் கமலப் பொகுட்டணை அணங்காம்
        ஊங்குவர் இருவரும் முகிலை