பக்கம் எண் :

 

       சிறுதேர்ப் பருவம்

733

    மாறுகொள் ஐம்பால் உமைவிழிக் கோடி
        தன்னிடை வரும்முறை யானும்
    ஏறும்அத் திருப்பெயர் எம்பெரு மாட்டிக்
        கென்றெடுத் தியம்புவர் உணர்ந்தோர்

என்று கூறுகிறது.

    இறைவி இறைவன் திருக்கண்களை மூட, அக்கண் சந்திர சூரியர்கட்கு ஒளிதரும் ஒளியுடையன ஆதலின், அவ்வெம்மையால் அம்மையார் கைகளில் வியர்வை தோன்ற, அவ்வியர்வை கங்கையாறாகப் பாய, அக்கங்கையினிடத்து வேளாளர்கள் உதித்தனர் என்பது புராணம். இதனால் இறைவனது முக்கண்களும் சூரிய, சந்திர, அக்கினிகட்கு ஒளி தருவன என்பதை நால்வர் நான்மணிமாலை அழகுற,

        கண்களோ ஒன்றுகாலையில்
            காணும் மாலையில் ஒன்று
        வயங்கித் தோன்றும் பழிப்பின்
            ஒன்று விழிப்பின் எரியும்

என்று கூறுகிறது.

    வேளாளர்கள் நன்னெறியும் நலனும் உடையவர்கள் என்பது உண்மை. வெறும் புகழ்ச்சி அன்று.  இதனைப் பரஞ்சோதியார்,

வழுக்கறு வாய்மை மாண்பும் கங்கைதன் மரபில் வந்த
விழுக்குடிப் பிறப்பும் மூவர்ஏவிய வினைகேட் டாற்றும்
ஒழுக்கமும் அமைச்சாய் வேந்தர்க் குறுதிசூழ் வினையும்
                                            குன்றா
இழுக்கறு மேழிச்செல்வர் வளமறு கியம்ப லுற்றாம்

வருவிருந் தெதிர்கொண் டேற்று நயனுரை வழங்கும்
                                            ஓசை
அருகிருந் தடிசில் ஊட்டி முகமன்நன் கறையும் ஓசை
உரைபெறு தமிழ்பா ராட்டும் ஓசைகேட் டுவகை துள்ள
இருநிதி அளிக்கும் ஓசை எழுகடல் அடைக்கும் ஓசை