3
3. வெருவப் பகைக்கடல்
சுவற்றழல் அரும்புகண்
விரைத்தாத
கித்தொ டையலான்
வீசவீ சப்பெற்று
வாம்பரி உகைத்துமிளிர்
வெங்கடாக்
களிறு கைத்தும்
உருவக் கதிர்த்தரள
மாலைகால் யாத்திட்ட
ஒள்ஒளிய ஆனம்
ஊர்ந்தும்
ஒருநம்பி ஆரூர னைப்புகலி
ஆண்தகையை
ஒப்பாயி
னாய்அ தான்று
மருவப் பொலிந்தமண்
தேர்ஊரின் முதலடி
மரீஇய
இருவருள் ஒருவரும்
மனுவாய் வையகம்
எடுத்தேத்த நிறைபுனல்
வயங்கும்ஊ
ருணிநி கர்த்த
திருவப் பெருக்கினமை
சேவையர் குலாதிபன்
சிறுதேர்
உருட்டி யருளே
சிறுகோல் எடுத்தரசு
செங்கோல் நிறுத்தினோன்
சிறுதேர்
உருட்டி யருளே.
[அ. சொ.] வெருவ-அஞ்ச,
சுவற்று-வற்றும்படி செய்யும், அழல்-கோபத்தீ, அரும்பு-தோற்றுவிக்கும், விரை-வாசனை நிறைந்த,
தாதகித்தொடையலான்-ஆத்திமாலை அணிந்த சோழன், அனபாயச் சக்ரவர்த்தி, வாம்பரி-தாவி ஓடும்
குதிரை, உகைத்து-ஏறி, ஊர்ந்து, மிளிர்-விளங்கும், கடாக்களிறு-மதசலம் பொழியும் யானை, கதிர்-ஒளி,
தரளம்-முத்து, கால்யாத்திட்ட-மறைத்த, யானம்-பல்லாக்கு, ஒரு நம்பி-ஒப்பற்ற நம்பியாகிய,
ஆரூரனை-சுந்தரரை, புகலி ஆண்தகையை-சீர்காழிப் பதியில் அவதரித்த திருஞான சம்பந்தரை, அதான்று-அதுவும்
அல்லாமலும், மரீஇய-கலந்த, இருவருள்-இறைவர் சோழர் ஆய இருவர், ஒருவரும்-ஒப்பற்ற சிவனாரும்,
மானுவாய்-ஒப்பாய், வையகம்-உலகம், ஏத்த-போற்ற, புனல்-நீர், வயங்கும்-விளங்கும்,
ஊருணி-பொதுக்குளம், திருவம்-செல்வச் சிறப்பு.
|