வ
விளக்கம்: அனபாயனது
ஆட்சிக் காலத்தில் போர் நிகழ்ச்சியினைப்பற்றிப் பெரிதும் அறியப்படலில்லை. நாடு அமைதி
நிலைவியதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் இவனிடத்துள்ள போர் வன்மை என்பது புலனாகிறது.
இதனால் பகை அரசர்கள் அஞ்சி இவனுக்கு அடங்கி இருந்திருக்க வேண்டும். இவனது சினத்தை “அழல்
அரும்புகண்” என்ற தொடரில் ஆசிரியர் புலப்படுத்தியுள்ளனர். இவன் சினம் கொண்டால் பகைக்
கடல் சுவறிவிடும் ; அஃது அஞ்சி நடுங்கிவிடும். ஆகவே, பகைவர் அஞ்சி ஒடுங்கி இருந்தனர்.
இதனால் இவனது ஆட்சி அமைதியான ஆட்சி என்பதை உணர்கிறோம். என்றாலும், அரசர்கட்கு இருக்க
வேண்டிய ஆண்மைச் சினம் உடையவன் இம்மன்னன் என்பதை நினைவூட்டவே முதலடியினை அமைத்தனர் திரு.
பிள்ளை அவர்கள். சோழர்கட்கு ஆத்திமாலை உண்டு என்பதைத் தொல்காப்பிய இலக்கண வாயிலாக
முன்பே கூறப்பட்டது.
இறைனுக்கும் இம்மாலை
உரியது. இதனை, “ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே” என்றதனால் அறியலாம்.
சோழர்கள் பகைவர்களை
எதிர்க்கையில் ஆத்தி மாலை அணிந்துகொள்வர் என்பதைப் புறப்பொருள் வெண்பா மாலையும்,
“விரல்படை மறவர்
வெஞ்சமம் காணின்,
மறப்போர்ச் செம்பியன்
மலைபூ உரைத்தன்று”
என்றனர். மேலும்,
கொல்களிறு ஊர்வர்
கொலைமலி வாள்மறவர்
வெல்கழல் வீக்குவர்
வேல்இளையர்-மல்கும்
கலங்கல் ஒலிபுனல்
காவிரி நாடன்
அலங்கல் அமர்
அழுவத்து ஆர்
என்று, சோழ மன்னர்களும்,
அவர்கள் தம் வீரர்களும் ஆத்தி புனைதலைக் கூறினர். ஆகச் சோழ மன்னர் அடையாள
|