ம
மாசற விசித்த வார்புறு
வள்பின்
மைபடு மருங்குல்
பொலிய மஞ்சை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி
மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு
பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை
உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை
எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ்
சேக்கை
அறியா தேறிய என்னைத்
தெறுவர
இருபால் படுக்கும்நின்
வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும்நல்
தமிழ்முழு தறிதல்
அதனொடும் அமையா
தணுக வந்துநின்
மதனுடை குழவத்தோள்
ஓச்சித் தண்என
வீசி யோயே வியல்இடம்
கமழ
இவண்நசை உடையோர்க்
கல்ல தவண
உயர்நிலை உலகத்
துறையுள் இன்மை
விளங்கக் கேட்ட
மாறுகொல்
வலம்படு குரிசில்நீ
ஈங்கிது செயலே
என்பது அப்பாட்டு.
சேக்கிழார் யானைமீது
அமர்ந்தப் பட்டு வீதிஉலாச் செய்விக்கப் பெற்றனர் என்பதையும் அப்புராணத்தில் காண்கின்றோம்.
இதனைச் “செறிமத யானைச்சிரத்தில் பொற் கலத்தோடு எடுத்துத் திருமுறையை இருத்தியபின் சேவையர்
காவலரை, முறைமை பெற ஏற்றி” என்பதாலும், “வாரணத்தில் இவரைக் கண்ட திருவீதி” என்பதாலும்
அறியலாம். ஆனால், குதிரைமீது இவர் வந்ததாகவோ, அரசன் அதுபோது கவரி வீசியதாகவோ சேக்கிழார்
புராணத்துள் குறிப்பு இல்லை. என்றாலும், அரசனிடமிருந்து விடை பெற்றுச் சென்று தில்லையை அடைந்தார்
என்று கூறும்போது, இவர் தலைமை அமைச்சர் ஆதலின், ஒருவேளை குதிரைமீது வந்திருக்கலாம். அந்த
எண்ணத்தில் இவர் குதிரைமீது வந்ததாகத் திரு பிள்ளை அவர்கள் குறித்தனர் போலும் ! இவ்வாறே
பல்லக்கில் சேக்கிழார் சென்றதாகவும் உமாபதியார் வாக்காம் சேக்கிழார்
|