புர
புராணத்துள் இல்லை.
இதுவும் சேக்கிழார் தலைமை அமைச்சர் ஆதலின், பல்லக்கில் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுத்
திகழும் பெருமைக்குரியவராய், இருந்திருப்பர் போலும். ஆதலின் இவர், சிவிகையில் சென்றதாக
உளம் கொண்டு ஈண்டு, அக்குறிப்பைக் குறிப்பிட்டனர். இவ்வாறே சேக்கிழார் தேர் ஊர்ந்ததும்
முதல் அமைச்சர் பதவியில் இருந்த போதெனக் கொள்க.
திரு. பிள்ளை அவர்கள்
குதிரையினை வாம்பரி என்றும் (தாவும் குதிரை) யானையினை வெங்கடாக் களிறு (விரும்பும் மதநீர்
ஒழுகும் யானை) என்றும் சிறப்பித்ததற்கு இணங்கப் பல்லக்கினை, “ஒளிய முத்துமாலை தொங்கவிடப்பட்டதனால்
மறைந்த ஒளிபொருந்திய பல்லாக்கு” என்று சிறப்பித்தனர். வெம்மை என்பது கொடுமை என்ற
பொருளுடன் விருப்பம் என்ற பொருளையும் உடையது. “வெம்முலை” என்பதற்கு விருப்பமான முலை என்பதே
பொருள். யானையின் மதநீரை ஈக்கள் விரும்பி மொய்த்தலின் அது வெங்கடாம் ஆயிற்று.
ஈண்டுத் திரு.
பிள்ளை அவர்கள் சேக்கிழார் சுவாமிகள் குதிரைமீதும் யானைமீதும் இவர்ந்து வந்ததால் நம்பி
ஆரூரரையும், சிவிகையில் உர்ந்து வந்ததால் திருஞான சம்பந்தரையும் தேரில் ஊர்ந்து வந்ததால்
இறைவரையும் ஒப்பாவார் என்று அனபுடன் கூறிய கற்பனை, மிகவும் பொருத்தமான கற்பனையாகும்.
சுந்தரர் யானைமீது
ஊர்ந்து சென்றார் என்பதற்கு அவர் தம் திருவாக்கே சான்றாகும். இதனைத் தம்பிரான் தோழர்,
“வானை மதித்தமர்வலம் செய்து எனை ஏற வைக்க ஆனை அருள் புகுந்தான்” என்றே தமது வாக்கால்
குறிப்பிட்டுள்ளனர். சேக்கிழாரும், “வீர வெண்களிறு கைத்து விண்மேல் செலும் மெய்த்தொண்டர்”
என்று குறிப்பிட்டுள்ளனர். இவர் குதிரைமீது இவர்ந்து சென்ற காட்சியினைச் சேக்கிழார், சுந்தரர்
திருமணக் கோலத்துடன் சென்ற நிலையினை அறிவிக்கும்போது, “பொன்னணி மணியார் வேகப் புரவிமேல்
கொண்டு போந்தார்” என்று
|