அற
அறிவிக்கிறார். இவ்வாறு
குதிரைமேல் இவர்ந்து சென்ற சுந்தரர் தமக்கு நிரந்தரமாகக் குதிரை ஒன்று இருக்க வேண்டும் என்ற
கருத்தில் குதிரை வேண்டுமென்று திருநாகைக் காரோணப் பெருமானை வேண்டியும் உள்ளனர். இதனை,
“காற்றனைய கடும் பரிமா ஏறுவதும் வேண்டும்” என்று வேண்டிய வேண்டுகோள் மூலம் அறிகிறோம். வேண்டிய
வேண்டியாங்கு ஈயும் இறைவர் சுந்தரர் வேண்டிய குதிரையினையும் கொடுத்திருப்பர் அல்லரோ? அங்ஙனம்
பெற்ற குதிரையில் சுந்தரர் சென்றனர் போலும் !
இப்பதிகத்தில்
சுந்தரர் தமக்குக் கறிவிரவும் நெய் சோறு, பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
பொற்பூ என்ற இவற்றைக் கேட்டதிலும் வியப்பில்லை. ஆனால் இக்கால நாகரிக முறைமைக்கேற்ப,
கழுத்து மாலை (Minor chain) வாசனைப் பொருள்கள் (Scent and Perfumes) குளிர்ச்சிதரும்
மூக்குக் கண்ணாடி (Cooling Glass) கேட்டதுதான் வியத்தற்குரியதாகும். இவற்றையும் கேட்டார்
என்பதை “முத்தாரம் இலங்குமிளிர் மணிவயிரக் கோவை, அவை பூணத் தந்தருளி மெய்க்கு இனிதா நாறும்,
கத்தூரி கமழ் சாந்து பணித்தருள வேண்டும். “காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்”
என்ற அடிகளில் காணலாம். விசிறிமடிப்பு மேல்குட்டை கேட்டதை, “பட்டிகையும் புரிதருள வேண்டும்
என்ற தொடரால் புலனாகிறது. இறைவனே இவரை இன்பமாக விளையாடுமாறு திருவருள் புரிந்தனர் என்பது,
வாழிய மாமறைப்
புற்றி டங்கொள்
மன்னவன் ஆரரு
ளால்ஓர் வாக்குத்
தோழமை ஆக உனக்கு
நம்மைத்
தந்தனம் நாம்முன்பு
தொண்டு கொண்ட
வேள்வியில் அன்றுநீ
கொண்ட கோலம்
என்றும் புனைந்துநின்
வேட்கை தீர
வாழிமண் மேல்விளை
யாடு வாய்என்
றாரூரர் கேட்க
எழுந்த தன்றே”
என்ற சேக்கிழார்
வாக்கால் உணர்கிறோம்.
|