பக்கம் எண் :

742

             சிறுதேர்ப் பருவம்

    திருஞான சம்பந்தர் சிறு குழந்தைப் பருவத்தினர்.  அவர் இறைவன் உறைவிடங்கட்கு நடந்து சென்று பதிகம் பாடுதல் சிரமம் என்று அறிந்த அவரது தந்தையார், அவரைத் தோள்மேல் சுமந்து செல்வர்.  சம்பந்தர் தோள் மீது இருந்துகொண்டே பதிகம் பாடுவர்.  இதனை, ‘ஆளுடைய பிள்ளையாரே, “அத்தர்பியல்மேல் இன்இசையால் உரைத்த பனுவல்” எனத் திருநனிப் பள்ளிப் பதிகத் திருக்கடைக் காப்பில் குறிப்பிட்டுள்ளனர்.  இதன்பின், நடக்கும்  பருவம்  உற்றபோது  நடந்து  சென்று  பதிகம்  பாடினர்.  இதனால்  குழந்தை இளைப்பும் களைப்பும் உறுவதைக் கண்ட திரு அரத்துறை இறைவர், அப்பதியுள்ளார்க்கு முத்துப் பல்லக்கு மணிக்குடை முதலியன தந்தருளுமாறு கட்டளை இட்டனர்.  அவ்வாறே அவர்கள் கொண்டு வந்து கொடுக்கத் திருஞான சம்பந்தர் இறைவர் திருவருளை வியந்து பல்லக்கில் ஏறினர்.  இதனைச் சேக்கிழார்,

    சோதி மூத்தின் சிவிகைசூழ் வந்துபார்
    மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்
    றாதி யார்அருள் ஆதலின் அஞ்செழுத்து
    ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்

என்று பாடியும் காட்டியுள்ளனர்.

    இறைவர் தமக்கு முத்துச் சிவிகை அளித்தபோது திருஞானசம்பந்தர் பாடிய பதிகம், “எந்தை ஈசன்” என்று தொடங்கும் பதிகம் ஆகும். அப்பதிகத்தில் இறைவர் தமக்கு முத்துச் சிவிகை கொடுத்த குறிப்பு எதுவும் காணப்பட்டிலது.  ஆனால் நம்பி ஆண்டார் நம்பிகள்,

வருந்தும் கொலாம்கழல் மண்மிசை ஏகிடின் என்றும்
திருந்தும் புகழ்ச்சண்பை ஞான சம்பந்தர்க்குச் சீர்மணிகள்
பொருந்தும் சிவிகை கொடுத்தனன் காண்புணரித்
                                        திகழ்நஞ்சு
அருந்தும் பிரான்நம் அரத்துறை மேவிய அரும் பொருளே