என
என்றும், “அத்தியும் மாவும் தவிர அரத்துறை, முத்தின் சிவிகை முன்னாள் பெற்றே” என்றும், “ஞாலத்து முத்தின்
சிவிகை அரன் கொடுப்ப” என்றும், நிகழ் “நெல்வாயில் முத்தின் சிவிகை முதல் கொண்டும்” என்றும்
பாடியிருப்பனவே சேக்கிழார் கூறுதற்குத் துணையாவன.
இவர்கட்குப் பின்
அருணகிரிநாதர், “கொச்சையில் சதுர்வேதச் சிறுவ நிற்கருள் கவிகை நித்திலச் சிவிகையைக்
கொடுத்தருள் ஈசன்” என்றும், கற்பனைக் களஞ்சியம் நம் சிவப்பிரகாச சுவாமிகள்,
தேனே றலர்சூடிசில்
பலிக்கென்றூர் திரியும்
ஆனேறி யாண்டுபெற்
றான்கொல்நீ-தான்ஏறும்
வெள்ளைமணி என்று
வினவுவோம் வாங்கியஅப்
பிள்ளையையாம் காணப்
பெறின்
என்று பாடிப்
போற்றியுள்ளனர்.
மேலே காட்டிய வரலாற்று
உண்மைகளால் நம்பி ஆரூரரும், புகலிக்காவலரும் முறையே குதிரை, யானை, பல்லக்கு ஏறினமையை உணர்ந்தோம்.
அவர்களைப்போல நமது சேக்கிழாரும் பரி, கரி, சிவிகை ஏறியதால் அவ்விருவரையும் ஒப்பாகும் பேற்றினர்
என்பது சரதம் அன்றோ?
அதான்று என்பதன்
பொருள் அதுவேயும் அல்லாமல் என்பதாம். அது+அன்று என்னும் இரு சொற்கள் புணர்ந்தே அதான்றாயிற்று.
இதற்குரிய நன்னூர் விதி, “அதுமுன் வரும்அன்று ஆன்றாம் தூக்கின்” என்பது.
சேக்கிழார்
பெருமானார் பரி, கரி, யானம் இவற்றை ஊர்ந்ததே அன்றித் தேரிலும் ஊர்ந்து சென்றதால்
இறைவரைப்போல் விளங்குவாய் என்றனர். இறைவர் மண்தேர் ஊர்ந்தது திரிபுர தகனக் காலத்தில்
என்க. மண்தேராவது பூமியாகிய தேர். மண் தேர் என்பது மட்டேர் என ஆயது “ணளமுன, டணவும் ஆகும்,
தநக்கள் ஆயும் காலே” என்னும் நன்னூல் விதிபற்றி என்க. அடியார்கள்
|