பக்கம் எண் :

 

       சிறுதேர்ப் பருவம்

745

    நீர்வளத்தால் நிலவளத்தையும், நிலவளத்தால் குடி வளத்தையும், குடிவளத்தால் கோன் வளத்தையும் பெருக்கும் செல்வச் சிறப்பு சேவையராம் வேளாளப் பெருந்தகையார்கட்கு இருத்தலின்,   “ஊருணி  நிகர்த்த   திருவப்   பெருக்கினமை  சேவையர்” என்றனர்.

(94)

4.     வசைதவிர் வினைத்திட்பம் வாய்ந்தாக வப்பாரின்
           மாற்றலர் எதிர்ந்த காலை
       மழைமதக் களியானை வாம்பரி சயந்தனம்முன்
           மற்றுள வரூதி னியெலாம்
       அசைவில்பல் படைக்கலம் கொடுநூழில் ஆட்டுபுபல்
           ஆறா எழுந்த நெய்த்தோர்
       அவ்வனிக அழன்இழுத் தோடிஉவர் ஆழிபுக்
           களவில்திடர் செய்ய நோக்கி
       இசைமலர் அலங்கலொடு வாகையும் சூடியார்
           எய்தப் புனைந்த பெருமான்
       இரும்புலியை மேருமுடி ஏற்றிப் பெருந்தேர்
           இணங்குற உருட்டி நேமி
       திசைதிசை உருட்டச் சேவையர் குலாதிபன்
           சிறுதேர் உருட்டி யருளே
       சிறுகோல் எடுத்தரசு செங்கோல் நிறுத்தினோன்
           சிறுதேர் உருட்டி யருளே

    [அ.சொ.] வசை-குற்றம், தவிர்-நீங்கிய, வினைத்திட்பம்-மன உறுதி, ஆகவப்பார்-போர்க்களம், ஆகவம்-போர், மாற்றலர்-எதிரிகள், காலை-பொழுது, வாம்பரிதாவும் குதிரை, சயந்தனம்-தேர், வரூதினி-சேனை, அசைவு-சோர்வு, தப்புதல்-மடிதல், கெடுதல், படைக்கலம்-ஆயுதம், நூழில் ஆட்டுபு-கொன்று குவித்தபோது, அனிக அழன்-சேனையாகிய பிணம், அனிகம்-சேனை, நெய்த்தோர்-இரத்தம், உவர் ஆழி-உப்புக்கடல், திடர்-மேடு, இசை-புகழ், அலங்கல்-