| 
ம
 
மாலை, வாகை-வெற்றிமாலை, 
ஆர்-ஆத்திமாலை, எய்த-பொருந்த, புனைந்த-தரித்த, பெருமான்-சோழ மன்னன்’  இரும்புலி-பெரிய  
புலிக்கொடியை,  முடி-உச்சி,  இணங்குற-பொருந்த,  நேமி-ஆக்ஞா சக்கரம், பல்லாறு-பல ஆறு, 
     விளக்கம் :  அமைச்சனுக்கு 
இருக்கவேண்டிய பண்புகளான சொல் வன்மை, வினைத்தூய்மை, வினை செயல்வகை முதலானவற்றுள் வினைத்திட்பம் 
என்பதும் ஒன்று, பரிமேலழகர்   வினைத்    திட்பத்தை    விளக்கும்போது   “தூயவினை முடிப்பானுக்கு வேண்டுவதாய 
மனத்திண்மை” என்றனர்.  மணக்குடவர், “வினையின்கண் திண்ணியர் ஆதல்” என்றனர்.  பரிதியார், 
“காரியத்தினால் திடம் பெற்றுநிற்றல்” எனறனர்.  இப்பண்பைப்பற்றி வள்ளுவர் கூறும்போது, 
“வினைத்திட்டம் என்பது ஒருவனது மனத்திட்பம்” என்றே கூறினர்.  இந்த வினைத் திட்பத்தினை 
எல்லாரும் மதிப்பர் என்றே வள்ளுவர் கூறுவர்.  “வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் உள்ளப்படும்” 
என்று அவர் கூறியதைக் காண்க. 
    அமைச்சனிடம் வினைத்திட்பம் 
இல்லாமல் ஏனைய திட்பங்கள் இருப்பினும், அவற்றை ஒரு பொருட்டாக உலகம் மதியாது என்றும் வள்ளுவர் 
மொழிந்துள்ளனர்.  இதனை அவர், 
    எனைத்திட்பம் எய்தியக் 
கண்ணும் வினைத்திட்பம் 
வேண்டாரை வேண்டா 
துலகு 
என்று குறித்துள்ளார். 
    இஃது இத்தகைய பண்பு 
ஆதலினால், இதனை வசைதவிர் வினைத்திட்பம் என்றனர் திரு. பிள்ளை அவர்கள்.  இப்பண்பினைச் 
சேக்கிழார் பெற்றிருந்தனர் என்பதை இப்பாட்டு நமக்கு அறிவிக்கும் குறிப்பாகும்.  யானையின் 
மத மிகுதியினைக் காட்ட மழையினை அடை ஆக்கினர்.  ஈண்டு, யானை, குதிரை, தேர்ச் சேனைகளைக் 
குறிப்பிட்டுக் காலாட்படையினைக் குறிப்பிடாத காரணம் மற்றுள வரூதினி என் 
 |