கடல
கடலில் சேரும் நிலையில்
திட்டுத் திட்டாக நின்றுவிடும். இந்நிலைகள் நிகழவேண்டுமாயின், போரில் வெற்றி காண வேண்டும்.
அங்ஙனம் கணட்போது வாகை என்னும் மலரை அணிவர் வெற்றி கண்ட அரசர்.
வெற்றிக்கு அறிகுறியாக அமைந்ததே வாகை மாலை. இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை,
இலைபுனை வாகை சூடி
இகல்மலைந்து
அலைகடல் தானை
அரசுஅட்டு ஆர்த்தன்று
என்றும்,
சூடினான் வாகைச்
சுடர்த்தெரியல் சூடுதலும்
பாடினார் வெல்புகழைப்
பல்புலவர்-கூடார்
உடல்வேல் அழுவத் தொளிதிகழும்
பைம்பூண்
ஆடல்வேந்தன் அட்டார்த்
தரசு”
என்றும் சுட்டிக்காட்டிக்
குறிப்பிட்டிருப்பதைக் காணவும்.
இவ்வாறு வாகை மாலை
சூடியபோதும், தம் தம் மரபுக்குரிய மாலையினையும் உடன் சூடிக்கொள்வர். ஈண்டுச் சோழ மன்னனது
வெற்றிச் செயலைக் கூறுதலின், ஆத்தியினைச் சூடுதலையும் குறிப்பிட்டனர்.
நமது தமிழ் நாட்டு
முடியுடை மூவேந்தர்களும் இமயம் வரைச் சென்று அம்மலைமீது தம் தம் கொடியினை ஏற்றி வந்துள்ளனர்.
இது குறித்தே சோழ மன்னன் ஒருவன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் என்றே பெயர் வழங்கப்பெறும்
பெருமையைப் பெற்றவானாயினான்.
ஆரியர் அலறத் தாக்கிப்
பேரிசைத்
தொன்றுமுதிர்
வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப்
பிணித்தோன்
என்று அகத்துள் இச்சேரன்
இமயத்துள் வில் பொறி பொறித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
|