New Page 1
சோழன் தனது புலிக்
கொடியை நிறுத்தியவன் என்பதைக் கலிங்கத்துப் பரணி, “பண்டு நின்றபடி நிற்க இது என்று
முதுகில், பாய் புலிப் பொறி பொறித்ததும் மறித்த பொழுதே” என்று குறிப்பிடுகிறது. பாண்டிய மன்னனும்
இமயத்தில் தனது கயல் பொறியைப் பொறித்ததைப் பெரியாழ்வார் “பருப்பதத்துக்கயல் பொறித்த
பாண்டியர் குலபதிபோல்” ஒன்று பாடியுள்ளனர்.
மூவேந்தர்களும்
இமயத்தின் உச்சியில் தமது மரபுக்கொடிகளை ஏற்றினர் என்பதைச் சிலப்பதிகாரம் வற்புறுத்திக்
கூறுகிறது. “தென் தமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின்தவழும் இமய நெற்றியில்
விளங்குவில் புலி கயல் பொறித்த நாள்” என்று கூறுவதைக் காண்க.
இன்னோர் அன்ன காரணங்களால்
தென்னாட்டு மன்னர்கள் வடநாட்டு மன்னர்களை வென்று வெற்றி கண்டு வாகை சூடினர் என்பதைத் திட்டவட்டமாக
அறிகிறோம். இதனை அகத்துள்,
ஆரியர் துவன்றிய பேரிசை
இமயம்
தென்னம் குமரியோ
டாயிடை
மன்மீக் கூறுநர்
மறந்தபக் கடந்தே
என்ற அடிகளில் காணலாம்.
இங்ஙனம் சென்று வெற்றிகண்டு
திரும்புகையில் வட அரசர்கள் காணிக்கை கொடுத்தனர் என்பதும், கரிகாலனது இமயப் படைஎடுப்பால்
புலனாகிறது.
செருவெங் காதலில்
திருமா வளவன்
புண்ணியத் திசைமுகம்
போகிய அந்நாள்
அசைவில் ஊக்கத்து
நசைபிறக் கொழியப்
பகைவிலக் கியதிவ்
பயங்கெழு மலைஎனக்
கொடுவரி ஏற்றிக்
கொள்கையில் பெயற்வோற்கு
|