| 
இப
 
இப்பால் இமயத் திருந்திய 
வாள்வேங்கை 
உப்பாலைக் 
பொற்கொட் டுழையாதா எப்பாலும் 
செருமிகு சினவேல் செம்பியன் 
ஒருதனி ஆழி 
உருட்டுவோன் எனவே 
என்று சாற்றுகிறார். 
    நமது வரலாற்றுப் 
புலமையில் வல்லுநரான சேக்கிழார் பெருமானாரும் நாட்டுவளத்தைக் கூற வந்தபோது முதற் செய்யுளிலேயே, 
“பாட்டியல் தமிழ்உரை 
பயின்ற எல்லையுள் 
 கோட்டுயர் பனிவரைக் 
குன்றின் உச்சியில் 
 சூட்டிய வளர்புலிச் 
சோழர் காவிரி 
 நாட்டியல் பதனையான் 
நவிலல் உற்றனன்” 
 
என்று பாடிச் சோழர் 
தம் இமயப் படை எடுப்பையும் அங்குப் புலிப் பொறி பொறித்தமையையும் பாடுகிறார். 
    இத்தகைய குறிப்புக்களையே 
ஈண்டுப் பிள்ளை அவர்கள்   “இரும்புலியை  மேருமுடி ஏற்றி” என்ற தொடரில் குறிப்பிட்டுள்ளார்.  
கரிகாற் சோழன் செயலை அவன் மரபில் வந்த ஏனையோர்க்கும் ஏற்றிச் சொல்லுதல் புலவர் மரபு. 
    
இப்பாடலில் பிள்ளையவர்கள் குறிப்பிடும் பொருள், சோழமன்னன் அநபாயன், நால்வகைப் படை 
கொண்டு நாட்டில் பகைவரைக் கொன்று குவித்து வெற்றி கண்டு, இமயத்தும் தன் மூதாதையர் போலப் 
புலிக்கொடி பொறித்து எல்லாத் திசைகளிலும் தனது ஆணையே செல்லத்  தேர்  ஊர்ந்து  
சிறக்க,  நீ  சிறுதேர்  உருட்டுவாயாக  என்று சேக்கிழாரை வேண்டுவதாகும்,  
 
(95) 
 |